மாலைமலர் : சென்னை , தமிழக சட்டசபையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, குறிப்பிட்ட பேருந்துகளில் தான் பெண்களுக்கு இலவசம் என்பதாகவும், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மகளிர் பேருந்து என்பது முதலமைச்சரின் கனவுத்திட்டம் என்றும், பெண்களுக்கென எந்த பேருந்துகள் இயக்கப்படுகிறதோ அதில் தான் ஏறி பயணிக்க வேண்டும் எனவும், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அறிவித்தால் போக்குவரத்துக்கழகத்தை எவ்வாறு நடத்துவது? என கேள்வி எழுப்பினார்.
மேலும்,போக்குவரத்துத்துறை ஏற்கனவே 48,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், மகளிர் அனைவரும் பேருந்துகளில் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக