வியாழன், 12 ஆகஸ்ட், 2021

ரெய்டு தகவல் எஸ்.பி.வேலுமணிக்கு எப்படி கசிந்தது? டிஜிபி கந்தசாமியிடம் பட்டென கேட்ட முதல்வர் ஸ்டாலின்

ஸ்டாலின் கேட்ட கேள்வி
அடியாளாக மாறிய அதிகாரி
வேலுமணியின் ஹாஸ்டல் எம்.எல்.ஏ வியூகம்

Mathivanan Maran -   Oneindia Tamil  :  சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிடப் போகிறார்கள் என்பது அவருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது?
எஸ்.பி.வேலுமணிக்கு தகவல் சொன்ன கறுப்பு ஆடு யார்? என்கிற விசாரணையில் இறங்கி உள்ளாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். அனேகமாக எஸ்.பி.வேலுமணிக்கு அடியாள் போல இன்னமும் வலம் வரும் அந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத்தான் இருக்கும் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவே இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. தமது பதவிக் காலத்தில் எப்படியெல்லாம் முறைகேடுகளை செய்ய முடியுமோ அத்தனையையும் அரங்கேற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் அரசு பணத்தை அபகரித்துக் கொண்டார் என்பதுதான் எஸ்.பி.வேலுமணி மீதான குற்றச்சாட்டு.
குறிப்பாக சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர்களில் மலைக்க வைக்கும் அளவுக்கு மெகா ஊழல் முறைகேடுகளை அரங்கேற்றினார் எஸ்.பி.வேலுமணி என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுகவின் ஆர்.எஸ். பாரதியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் வெங்கடேசனும் வழக்கு தொடர்ந்தனர்.



இந்த புகார்களின் அடிப்படையில்தான் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேற்று தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகாக்கள் தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ரெய்டு நடந்த இடங்களில் எல்லாம் அதிமுகவினர் குவிக்கப்பட்டு அவர்களுக்கு சாப்பாடு போட்டு கோஷம் போட வைத்தனர்.
இந்த நிலையில் ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே முதல்வர் மு.க. ஸ்டாலினை திடீரென சந்தித்தார் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநரான டிஜிபி கந்தசாமி. 15 நிமிடங்கள் தான் இந்த சந்திப்பு நடந்தது.

ரெய்டுகளும் நடைமுறைகளும் ரெய்டுகளும் நடைமுறைகளும் பொதுவாக, ரெய்டு நடக்கும் போது ஆட்சி தலைமையை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சந்திக்க மாட்டார்கள். புரோட்டகாலை மீறி இந்த சந்திப்பு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்ததன் பேரிலேயே அவரை சந்தித்தார் டிஜிபி கந்தசாமி என்கின்றன கோட்டை வட்டாரங்கள். லஞ்ச ஒழிப்புத்துறை தன்னாட்சி அதிகாரம் கொண்டது. ஒரு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு , விஜிலென்ஸ் அதிகாரிகளை வரவழைத்து முதலமைச்சரோ அல்லது அமைச்சரோ ரகசியமாக விவாதிப்பார்கள் அல்லது முதல்வரின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு இவர் மீது இப்படிப்பட்ட புகார் இருக்கிறது ; ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன; நடவடிக்கை எடுக்கலாமா ? என்று உயரதிகாரிகள் விவாதிப்பார்.

அதில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். ஸ்டாலின் கேட்ட கேள்வி ஸ்டாலின் கேட்ட கேள்வி ஆனால், ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போது முதல்வர் மு.க.ஸ்டாலினை லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் சந்திப்பது அசாதாரணமானது எனவும் கூறப்படுகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் டிஜிபி கந்தசாமி சந்திப்பில் நடந்தது ஒரே ஒரு விசயம் தான் என்கிறது கோட்டை தகவல். அதாவது, ரெய்டு நடத்தப்படப் போகும் தகவல்கள் எஸ்.பி.வேலுமணிக்கும் அவரது சகோதரருக்கும் எப்படி முன் கூட்டியே தெரியும்? உங்களுக்கு நம்பிக்கையான ஆட்களைத்தானே துறையில் வைத்திருக்கிறீர்கள் ? அப்புறம் எப்படி சம்மந்தப்பட்டவர்களுக்கு முன் கூட்டியே தெரிந்தது ? என்ற கேள்விகளை கந்தசாமியிடம் கேட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்.

அதற்கு விசாரிக்கிறேன் சார் என்று மட்டும் சொல்லி விட்டு வந்துள்ளார் டிஜிபி கந்தசாமி. அடியாளாக மாறிய அதிகாரி அடியாளாக மாறிய அதிகாரி இது தொடர்பாக கோட்டை வட்டாரங்களில் நாம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்...

 கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணியின் வலதுகரமாக, அடிப்பொடி தொண்டராக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி செயல்பட்டு வந்தது தலைமை செயலக வட்டாரங்களில் மட்டுமல்ல.. அரசியல் மேலிடங்களுக்கும் தெரியும்.
சட்டசபை தேர்தலின் போது வேலுமணிக்காக தனது காரிலேயே பணத்தை கொண்டு சேர்த்து பட்டுவாடா செய்தவராம் அந்த அதிகாரி. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாறிய நிலையில் வேலுமணியின் அடியாள் போல செயல்பட்ட அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உடனடியாக சம்பந்தப்பட்ட துறையில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்.

ஆனால் எஸ்.பி.வேலுமணி மீதான விசுவாசம் மட்டும் அந்த அதிகாரிக்கு மட்டும் குறையவில்லையாம். வேலுமணி மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் பாயும்? அதை எப்படி எல்லாம் தடுக்கலாம் என ஸ்கெட்ச் போட்டு லாபியில் குதித்தாராம் அந்த அதிகாரி. கடுப்போகிப் போன அரசுத் தரப்பு மீண்டும் அவரை டம்மி பதவிக்கு தூக்கி அடித்தது.

அனேகமாக ரெய்டு தகவலை வேலுமணி கோஷ்டிக்கு பாஸ் செய்த கறுப்பு ஆடு அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கக் கூடும் என்று திடமாக நம்புகிறதாம் மேலிடம். இதற்காக எதிர்காலத்தில் அரசிடம் இருந்து அவருக்கு வெயிட்டாக ஏதேனும் ஒன்று கிடைத்துதான் ஆகும் என்கின்றன அந்த வட்டாரங்கள். வேலுமணியின் ஹாஸ்டல் எம்.எல்.ஏ வியூகம் வேலுமணியின் ஹாஸ்டல் எம்.எல்.ஏ வியூகம் ரெய்டு தகவல் கிடைப்பதற்கு முன்னர் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பங்களாவில்தான் தங்கியிருந்தார் எஸ்.பி.வேலுமணி.

கறுப்பு ஆடுகள் ரெய்டு வரப்போகும் தகவலை முன்கூட்டியே அவருக்கு தெரிவித்ததால் எம்.எல்.ஏ. ஹாஸ்டலுக்கு வந்துவிட்டார். அதேபோல, அவரது ஆதரவாளர்களும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வருவதற்கு முன்பே ஹாஸ்டலில் குவிக்கப்பட்டுவிட்டனர். லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த போது, இது எம்.எல்.ஏ. ஹாஸ்டல் ; இங்கு ரெய்டு நடத்தணும்னா சபாநாயகரின் அனுமதி வேண்டும்; அந்த அனுமதியை வைத்திருக்கிறீர்களா? என்று எஸ்.பி.வேலுமணியின் ஆட்கள் எகத்தாளமாக கேட்டிருக்கின்றனர்.

இதை ஒருவழியாக சமாளித்துதான் உள்ளே நுழைந்த போலீஸ் பல மணிநேரம் அங்கேயே தங்கி இருந்தது. இதனால் எஸ்.பி.வேலுமணியிடம் எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் துருவித் துருவி போலீசார் விசாரணை என தகவல்கள் தீயாக பரவ ரத்தத்தின் ரத்தங்கள் அங்கே சூடு தணியாமல் குவிந்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை: