மாலைமலர் : எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சென்றடைந்த நிலையில், 5 கிமீ சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. இன்று எரிமலை வெடித்துச் சிதறி கடும் சீற்றத்துடன் நெருப்புக் குழம்புகள் வெளியேறுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்ததால் கருப்பாக காட்சியளிக்கிறது.
எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சென்றடைந்தது. ஒரு பாலம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர்.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி எரிமலை சீற்றம் மற்றும் நிலநடுக்கம் ஏற்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக