திங்கள், 6 டிசம்பர், 2021

மாதவிடாய் பற்றி ஹிந்து வைதீக சனாதன புராணங்களில் சுவாரஸ்யமான கதைகள்

May be an image of text that says 'இந்திரனைப் பீடித்த பிரமஹத்தி பாவம், மங்கையர் முதலானவரிடம் போய்ச் சேர்ந்தது. அதன்படியே ரஜஸ்வலையாகும் அப்பெண்கள் அந்தப் பபாவத்தை ஏற்று கழிக்கலாயினர். ஆகையால், பயிஷ்டையான (மாதவிலக்கான) ஸ்திரீயை நான்கு நாட்கள் வரையில் பிறர் பார்க்கலாகாது. பார்த்தால் பாவம் வந்து அடையும் அடையும்.பயிஷ்டை யானவள் முதல் நாளன்று சண்டாள ஸ்திரீயைப் போலிருப்பாள்; இரண்டாம் நாள் பிரமஹத்தி செய்தவளை ஒப்பாவாள். மூன்றாம் நாள ஆடை ஒலிப்பாளைப் போலாவாள். நான்காவது நாள் புனலாடிய பிறகு சிறிது தூய்மையடைவாள். ஐந்தாம் நாள் குடும்பக் காரியங்களையெல்லாம் செய்வதற்கு உரியவளாகச் சுத்தியை அடைவாள். பயிஷ்டையான ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையிலுள்ள இரட்டை நாள் ஏழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தால் புருஷப் பிரஜை உண்டாகும். கருட புராணம்'

Dhinakaran Chelliah  :  மாதவிடாய் எதனால் ஏற்படுகிறது
பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான விசயங்களில் மாதவிடாயும் ஒன்று. ஆனால் ஹிந்து வைதீக சனாதன புராணங்களில் மாதவிடாய் பற்றி சுவாரஸ்யமான கதைகள் சொல்லப்படுகிறது.மாதவிடாய் பற்றி ISKCON ஸ்தாபகர் ஶ்ரீலஶ்ரீ பிரபுபதா விரிவுரை எழுதிய ஶ்ரீமத் பாகவதம் கூறும் கதையை சில வருடங்களுக்கு முன்பே பதிவு செய்திருந்தேன்.
கருட புராணமும் மாதவிடாய் பற்றிய கதையைக் கூறுகிறது. இந்தக் கதையினை பெருமாள் கூற கருடாழ்வார் கேட்பதாக கருடபுராணம் கூறுகிறது. அதை உங்களுக்கு வழங்குகிறேன்;
இந்திரன், மங்கையர் மயக்கத்தில் தேவர்களின் குருவான வியாழ பகவான் வந்ததையும் கவனியாது உரிய கௌரவமும் வழங்காததால்,கோபம் கொண்ட வியாழன் இந்திரலோகத்தை விட்டு வெளியேறினான்.
ஆசிரியனை மதியாததால் இந்திரனது செல்வ வளங்கள் சிதைந்தன.ஆசிரியரான வியாழனைத் தேடி அலைந்து காண முடியாததால் பிரம்மாவிடம் சென்று முறையிட்டான் இந்திரன்.


பிரம்மா இந்திரனிடம், உன் ஆசிரியன் உனக்களித்த தண்டனை சரியானதுதான், வியாழன் வரும் வரை இடைக்காலத்தில் உனக்கு ஓர் ஆசான் வேண்டுமல்லவா,தானவனான துவஷ்டா என்பவனின் மகன் விசுவரூவன் எனும் மூன்று தலை உள்ளவன் இருக்கிறான். அவன் சீரிய ஒழுக்கமுடையவன்,அறிவிற் சிறந்தவன் அவனையே உனது குருவாக க் கொள்வாய் என்று கூறினான்.(தானவர்கள் தேவர்களைக் காட்டிலும் வித்தியாசமானவர்கள்.பிரஜாபதி தட்சனின் மகள் தனுவிற்கும் முனிவர் காசியபருக்கும் பிறந்தவர்கள் தானவர்கள் என்ற குறிப்பு வேறு பல புராணங்களில் உண்டு.தானவர்களை அசுரர்கள் எனும் நூல்களும் உண்டு)
பிரம்மதேவன் கூறிய அறிவுரையை ஏற்ற இந்திரன் விசுவரூவனை தன் ஆசிரியனாகக் கொண்டான்.இந்திரன் வேள்வி ஒன்றைச் செய்ய விரும்பினான். அந்த விருப்பத்தை தன் புதிய ஆசானிடம் கூறினான்.வேள்வி துவங்கியது. வஞ்சகனான தானவன் அந்த வேள்வியில், தன் குலத்தைச் சார்ந்த தானவர்களுக்கு ஆக்கங் கூறி மந்திரங்களைச் சொல்லி வேள்வியைச் செய்தான்.
புதிய ஆசிரியனது வஞ்சகச் செயலை அறிந்த இந்திரன் கோபங்கொண்டு தன் குருவாகிய விசுவரூவனைத் தன் வஜ்ராயுதத்தால் வெட்டினான். அவனது மூன்று தலைகளையும் இந்திரன் வெட்டியவுடன் அந்த வஞ்சகன் ஒழிந்தான். ஆனால் அவனுடைய தவவலிமையினால் சோம பானஞ் செய்யும் அவன் தலைகளில் ஒன்று காடையாயிற்று. சுராபானஞ் செய்யும் தலை ஊர்க்குருவியாயிற்று. அன்ன பானஞ் செய்யும் தலை, கிச்சிலிப் பறவை ஆயிற்று.
விசுவரூவன் தானவனாயினும் அவன் குருவானபடியால்,அவனைக் கொன்ற இந்திரனுக்கு பிரமஹத்தி தோஷம் பீடித்தது. தேவர்கள் தங்கள் தலைவனைப் பீடித்த பிரமஹத்தி தோஷத்தை நிவர்த்திப்பதற்கு ஒரு வழி செய்தார்கள். அவர்கள் பெண்களையும் மண்ணையும் தண்ணீரையும் வேண்டி, இந்திரனைப் பீடித்த தோஷத்தை பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்கள் தேவர்களை நோக்கி, "இதனை நாங்கள் போக்கிக் கொள்வது எப்படி?" என்று கேட்டார்கள்.
அதற்குத் தேவர்கள், "நீரிலே தோஷம் நுரையாகக் கழியும். மண்ணிலே உவராகக் கழியும், பெண்களுக்குப் பூப்பாகக் கழியும்!” என்றார்கள். அதற்கு அவர்கள் மூவரும் “பழி சுமக்கும் எங்களுக்குப் பயனேதும் உண்டா?" என்றார்கள். கருவுயிர்க்கும் வரையில் அதற்கு தேவர்கள், "பெண்கள் கணவரை மருவிக் களிக்கலாம்.மண்ணகழ்ந்த குழி தானே நிறையும்! நீர் இறைக்க இறைக்க சுரக்கும்! மரம் வெட்ட வெட்டத் துளிர்க்கும்" என்றார்கள்.
இவ்வாறு இந்திரனைப் பீடித்த பிரமஹத்தி பாவம், மங்கையர் முதலானவரிடம் போய்ச் சேர்ந்தது. அதன்படியே ரஜஸ்வலையாகும் அப்பெண்கள் அந்தப் பாவத்தை ஏற்று கழிக்கலாயினர். ஆகையால், பயிஷ்டையான (மாதவிலக்கான) ஸ்திரீயை நான்கு நாட்கள் வரையில் பிறர் பார்க்கலாகாது. பார்த்தால் பாவம் வந்து அடையும்.பயிஷ்டை யானவள் முதல் நாளன்று சண்டாள ஸ்திரீயைப் போலிருப்பாள்; இரண்டாம் நாள் பிரமஹத்தி செய்தவளை ஒப்பாவாள். மூன்றாம் நாள் ஆடை ஒலிப்பாளைப் போலாவாள். நான்காவது நாள் புனலாடிய பிறகு சிறிது தூய்மையடைவாள். ஐந்தாம் நாள் குடும்பக் காரியங்களையெல்லாம் செய்வதற்கு உரியவளாகச் சுத்தியை அடைவாள்.பயிஷ்டையான ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையிலுள்ள இரட்டை நாள் ஏழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தால் புருஷப் பிரஜை உண்டாகும். ஆகையால் ஆண்மகனைப் பெற விரும்புகிறவன் தன் மனைவியை இரட்டை நாளிலேயே சேர வேண்டும். நான்கு தினத்துக்குமேல் பதினெட்டு நாள் வரையில் இரவுக் காலத்தில், இரட்டை நாளில் கர்ப்பந்தரித்தால் குணவானாகவும்,தனவானாகவும் தர்மிஷ்டனாகவும் ஶ்ரீ விஷ்ணு பக்தியுடையவனாகவுமுள்ள ஒரு புத்திரன் பிறப்பான்.
இப்படியாக “மனித சாரீரம்” எவ்வாறு உருவாயிற்று என்ற கருடாழ்வாரின் கேள்விக்கு Mr.பெருமாள் பதில் அளிக்கும் பகுதியில் (அத்.20) கூறப்பட்டுள்ளது.
அப்போது தொடங்கி இப்போதும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது இதனால்தான்.
அறிவிற் சிறந்த ISKCON ஶ்ரீ லஶ்ரீ பிரபுபதாவின் சீடர்களும் இந்தப் புராணங்கள் கூறும் கதைகளை உலகெங்கும் வெற்றிகரமாகப் பரப்பி வருகிறார்கள்.
“Women as a class are very lusty, and apparently their continuous lusty desires are never satisfied. In return for Lord Indra’s benediction that there would be no cessation to their lusty desires, women accepted one fourth of the sinful reactions for killing a brāhmaṇa.”
(Excerpts from Srimad-Bhagavatam translated by Srila Sri Prabhupada,founder of ISKCON )
ஶ்ரீ மத் பாகவதம் விசுவரூவனை பிராம்மணன் என்கிறது.தவிர அவிர்பாகத்தை ரகசியமாய் அசுர ர்களுக்கு அளித்ததால் இந்திரன் அவனை கொன்றான் என்கிறது.
தானவர்கள் பற்றி திருஞான சம்பந்தர் (மூன்றாம் திருமுறை 03.069) “வானவர்கள் தானவர்கள்” எனப் பாடல் பாடுகிறார்.தேவர்கள் அசுரர்கள் என்று மட்டுமில்லாமல்,
பதிகத்திற்கு பதிகம் வைதீகப் புராணங்களில் உள்ள கருத்துக்களை திருஞான சம்பந்தர் பாடினாலும் தமிழ் கூறும் சைவர்கள் சம்பந்தரின் துதிபாடுவதை நிறுத்திய பாடில்லை.

 May be an image of text that says 'அவனுடைய தவவலிமையினல் சோம ஒன்று காடையாயிற்று. சுராபானஞ் பானஞ் செய்யும் பயனே ஆயிற்று. சுவவருவன் அவன் குருவானபடியால், அவனக் கொன்ற இந்திரனுக்கு ரமஹத்தி தோஷம் பீடித்தது- தங்கள் திலவனப் பீடித்த பிரமஹத்தி நிவர்த்திப்பதற்கு வழி அவர்கள் பங்கிட்டுக் கொடுத்தார்கள். வேண்டி. இந்திரனப் பீடித்த தோஷத்தை தேவர்கள "இதன் போக்கிக் கொள்வது எப்படி?" என்று. கேட்டார்கள். அதற்குத் தேவர்கள், "நீரிலே தோஷம் மண்ணிலே கழியும். கழியும், பூப்பாகக் கழியும்!" அதற்கு மூவரும். "பழி சுமக்கும் எங்களுக்குப் உண்டா?" அதற்கு தேவர்கள், "பெண் வரையில் மருவி'க். களிக்கலாம். குழி தானே நிறையும்! நீர் இறைக்க. மரம் வெட்ட வெட்டத் துளிர் க்கும்!" சுரக்கும்! இவ்வாறு இந்திரப் பீடித்த பிரமஹத்தி பாவம், மங்கையர் போய்ச் சேர்ந்தது. அதன்படியே ரஜஸ்விலயாகும் அந்தப் ஏற்று ஆகையால் ஸ்திரியை நான்கு நாட்கள் பாவம் வந்து அடையும்.. ஸ்திரியைப் போலிருப்பாள்; செய்தவளே ஒப்பாவாள். மூன்ழும் முத்ல் நாளன்று பிரமஹத்தி சிறிது'   May be an image of text that says 'சென்முன். அவனது இருப்பிடத்திலும் பிற இடங்களிலும் அவினக் கா முடியா ததால், குழம்பிய உள்ளத்தோடு நான்முகனிடம் சென்று நடந்தவற்றை அவனிடம் முறையிட்டான். நான்முகன் சிந்தித்தான். "குல குருவை இழந்ததால் திவினன கொழுந்து விட்டு வளர்ந்துள்ளது. அதின் அருந்தும் செவ்வியும் கிட்டியது என்று உணர்ந்து. அதற்கேற்ப, இந்திரனன நோக்கி. நோ "இந்திரா) செய்த பிழை பிழையேதான். அதற்கு உன் ஆசிரியன் உனக்களித்த ஆகையால் உன் ஆசான் வருமளவுட காலத்தில் ஆசான் வேண் டுமல்லவா? தானவனனை துவஷ்டா என்று ஒருவன் இருக்கிருன். அவன் மகன் விச்சுவவுருவன் ஒருவன். இருக்கிறுன். அவன் முத்திலயன். சீரிய ஒழுக்க அறிவிற் சிறந்தவன். அவின்யே உனது குருவாகக் என்று கூறினுன். பிரமதேவன் கூறிய அறிவுரையை ஆசிரியனுகக்'  May be an image of text that says 'கூடியதும், காம. பெற்றதும் யாபி எல்லாப் உரிய சமஸ்த இருக்கிழுர்கள்!" என்று கூறியருளினர். உளதாகும். தேகத்திலேயே 20. தேவேந்திரன் மயங்கிய கதையும் மாதவிலக்கு, தாம்பத்திய உறவு, கருவளர்ச்சி, உடலியல் பற்றிய விளக்கங்களும் கருடன் பரமபத நாதினத் தொழுது. "சர்வலோக சரண்யரே! உடலில், தோல், நரம்பு, எலும்பு. இர த்தம், மாமிசம், தில, கைகள், கால்கள். நாக்கு, நாசி: இர முதலியவற்றுல் அமைக்கப்பட்டு உறுப்பு. நகம், ரோமம் ஜாலம் போலத் தோன்றுகிறதே! சரீரம் எங்ஙனம் அதை அடியேனுக்குச் சொல்ல பலவுலகங்கிளயும் படைத்துக் காக்கும் பரந்தாமன், பறவைக்கரசனுகிய கருடன் நோக்கிக் கூறலானர்: "காசிப முனிவரின் மைந்தனே! நீ கேட்ட கேள்வி. நல்லதொரு அதற்குரிய பதிலத் தெளிவாகச் சொல்லுகிறேன். "மாத விலக்கான பெண்கள் நான்கு நாட்கள் புறம்பே இருக்க வேண்டும். முன்பு ஒரு தன் அரியிண அமர்ந்து கந்தர்வர்கள் இசைத்த சமயத்தில் தேவகுருவான யாழ மங்கையர் மயக்கத்தில். செலுத்த ஆடுகின்ற அரம்பையரின் வயப்பட்டிருந்தான். மதி'

 

கருத்துகள் இல்லை: