பிபின் ராவத் - ஜியா உல் ஹக்
விகடன் : 2019-ம்
ஆண்டு முடிவதற்குள், இந்த முடிவின்மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்,
பிபின் ராவத். ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவி வகிக்கும் பிபின் ராவத்,
இன்றோடு ஓய்வுபெற்றார். தற்போது முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியில்
இருப்பவர் ஓய்வுபெறும் வயது 65 என சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், பிபின்
ராவத் இன்னும் 4 ஆண்டுகள், முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
முப்படைகளின்
தலைமைத் தளபதி என்ற பொறுப்பில் இருப்பவர், ஏதாவது ஒரு படையில் தளபதியாக
இருந்திருக்க வேண்டும் எனவும், அந்தப் பொறுப்பில் வழங்கப்பட்ட அதே சம்பளம்
வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்.
இந்தப் பதவி, நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்டது. கார்கில் போருக்குப்
பின், பாதுகாப்புத்துறையில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து
ஆராய, அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசால் கே.சுப்ரமணியன் தலைமையில் குழு
அமைக்கப்பட்டது. அந்தக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில்,
`முப்படைகளுக்கும் ஒரே தளபதி' உருவாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த சுதந்திர தின விழா உரையில், பிரதமர் மோடி இதுகுறித்துப் பேசியிருந்தார். அதன்படி, தற்போது பிபின் ராவத் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
2016-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31-ம் தேதியன்று, இந்திய ராணுவத்தின் 27-வது தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் பிபின் ராவத். தலைமைத் தளபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு, துணை தலைமைத் தளபதியாகப் பணியாற்றிவந்தார். உத்தரகாண்ட்டில் பிறந்த பிபின் ராவத்தின் குடும்பம், பல தலைமுறைகளாகத் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றுகிறது. டெஹ்ராடூன், சிம்லா, தமிழகத்தின் வெலிங்டன் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவக் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்ற பிபின் ராவத், அமெரிக்காவில் ராணுவம் குறித்த பட்டப்படிப்பு முடித்துள்ளார்
தனது தந்தை பணியாற்றிய அதே படையில், 1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார் பிபின் ராவத். உயர்ந்த மலைகளின்மீது போர் புரிதலிலும், ஆட்சிக்கு எதிரான ஆயுதக்குழுக்களை ஒடுக்குவதிலும் கை தேர்ந்தவர், இவர். நாடு முழுவதும் பல்வேறு ராணுவப்படைகளுக்குத் தலைமை தாங்கியதோடு, ராணுவம் குறித்த கல்வியில் ஆர்வம் கொண்டவர். ராணுவ போர்த்திறன் குறித்த தனது ஆய்வுக்காக, கடந்த 2011-ம் ஆண்டு, மீரட்டிலுள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார், பிபின். 2008-ம் ஆண்டு, காங்கோ நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பப்பட்ட அமைதிக்குழுவில், இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகச் சென்றார். அவரது தலைமையின் கீழ் அமைதிக்குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டதாகவும், அதுவரை அமைதியாக இருந்த இந்தியாவின் அணுகுமுறை, அவரின் தலைமைக்குப் பின் இரும்புக்கரம் கொண்டதாக மாறியதாகவும் அந்த அமைதிக்குழுவில் இருந்தவர்கள் அவரைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர். > மத்திய அரசின் தற்போதைய கடுமையான அரசியல் சூழலில், முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், பி.ஜே.பி அரசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பலவற்றிலும், தன்னைத் தொடர்புபடுத்தி பல முறை சர்ச்சைகளுக்குள்ளானார் பிபின் ராவத். காஷ்மீரில் தனது வாகனத்தின் முன்பு, காஷ்மீரி ஒருவரை மனிதக் கேடயம் போல கட்டிவைத்து, கல் எறிபவர்களிடமிருந்து தன்னைக் `காப்பாற்றிக்' கொண்டதாகக் கூறிய ராணுவ அதிகாரி லீடுல் கோகோய் மீது சர்வதேச அளவில் மனித உரிமைகள் ஆணையங்கள் கண்டனம் தெரிவித்தன. எனினும், ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத், லீடுல் கோகோய்க்கு ராணுவத் தலைமைத் தளபதியின் சிறப்பு விருதை அளித்து பெருமைப்படுத்தினார். நமது வீரர்கள் கிராமங்களிலிருந்து வருபவர்கள். அவர்களோடு, முகாம்களுக்கு பெண் ராணுவத்தினரை அனுப்ப முடியாது. அவர்கள், அதற்குத் தயாராக இல்லை. அவர்களுக்குத் தனி டென்ட் கொடுத்தால், யாராவது எட்டிப் பார்க்கிறார்கள் என்று புகார் செய்வார்கள். 2017-ம் ஆண்டு, ``காஷ்மீரில் இந்த மக்கள் எங்கள்மீது கல் வீசுகிறார்கள்; கல்லுக்குப் பதிலாக, ஆயுதங்கள் ஏதேனும் வீசட்டுமே! அப்போது நாங்கள் யாரென்று அவர்களுக்குத் தெரியும்" என்று பிபின் ராவத் பேசியது சர்ச்சைக்குள்ளாகியது. 2018-ம் ஆண்டு, பெண் ராணுவத்தினருக்கு போர்களில் ஈடுபடுவது குறித்த நேர்காணலின்போது, பிபின் ராவத் பேசிய ஒவ்வொன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ``நமது வீரர்கள், கிராமங்களிலிருந்து வருபவர்கள். அவர்களோடு முகாம்களுக்கு பெண் ராணுவத்தினரை அனுப்ப முடியாது. அவர்கள், அதற்குத் தயாராக இல்லை. அவர்களுக்குத் தனி டென்ட் கொடுத்தால், யாராவது எட்டிப் பார்க்கிறார்கள் என்று புகார் செய்வார்கள். டெல்லியிலேயே பெண்கள் இதுபோன்று கூறுகிறார்கள். முகாம்களில், 100 ராணுவ வீரர்கள் தன்னைச் சுற்றியிருக்கையில் இப்படியான பிரச்னைகள் எழும்" என்றார் பிபின் ராவத். தற்போது நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுவருகையில், தனது விதிகளை மீறி, ``மாணவர்களைப் போராட்டத்திற்கும், வன்முறைக்கும் இட்டுச் செல்பவர்கள் நல்ல தலைவர்கள் அல்ல" என்று பேசியது எதிர்க்கட்சிகளிடையே பெரும் கண்டனங்களை எழச் செய்துள்ளது. இந்தியாவில், முப்படைகளுக்கும் ஒரே தலைமைத் தளபதி என்ற பொறுப்பு உருவாக்கப்படுவதில், தகவல்தொடர்பு, அலுவல் விவகாரங்கள், ஒற்றைத் தலைமை முதலானவை சாதகங்களாகப் பார்க்கப்படுகின்றன. எனினும், இந்தியா போன்ற நாட்டில் பாதுகாப்புத்துறைக்கு ஒரே தளபதி என்பது, ராணுவ ஆட்சியில் கொண்டுபோய் முடியலாம் என இந்திய ராணுவம் குறித்து புத்தகங்கள் எழுதிய ஆய்வாளர் ஸ்டீவன் வில்கின்சன் முதலானோர் கூறியுள்ளனர். ``எதிரிகள் நம்மைக் கண்டு பயப்படுவதுபோல, மக்களும் நம்மைக் கண்டு அஞ்ச வேண்டும். நமது ராணுவம் அமைதியானது; எனினும் சட்டம் ஒழுங்கு விவகாரங்களைக் காக்க நாங்கள் அழைக்கப்பட்டோம். மக்கள், நிச்சயம் எங்களைக் கண்டு அஞ்ச வேண்டும்" என்று பேசிய பிபின் ராவத், தற்போது இந்திய ராணுவத்தின் உச்சபட்ச பதவியைப் பெற்றுள்ளார். அவரின் எதிர்கால நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து காண வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக