மாலைமலர் : போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை:
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து சாவியை பெறுவதற்காக தீபா, தீபக் இருவரும் இன்று சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். வீட்டுச்சாவியை கலெக்டர் விஜயராணி அவர்களிடம் வழங்கினார்.
இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று போயஸ் இல்ல சாவி அவர்களிடம் வழங்கப்பட்டது’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக