newsNews18 Tamil : அரசு பேருந்தில் இருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழக போக்குவரத்து துறையின் குமரி மாவட்ட துணை இயக்குனர் (இயக்கம் & ஆய்வு) ஜெரோலின் மூதாட்டியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து பெண் பயணி நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி வாணியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமேரி. மீன் விற்பனை செய்துவரும் இவர் குளச்சல் பேருந்துநிலையத்தில் இருந்து வாணியக்குடி செல்லும் அரசு பேருந்தில் ஏறியபோது, நாற்றம் அடிப்பதாக கூறி அவரை பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கிவிட்டுள்ளார்.
இதையடுத்து, மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக போக்குவரத்து துறையின் குமரி மாவட்ட துணை இயக்குனர் (இயக்கம் & ஆய்வு) ஜெரோலின் மூதாட்டியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை அமைக்க வேண்டும்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது
மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்
Dayalan Shunmuga குளச்சல் பேருந்தில் இறக்கிவிடப்பட்ட தலை சுமடு பெண் போராட்டம் தலைச் சுமடு பெண்கள் நடத்திய இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
இது ஏதோ போகிற போக்கில் நடக்கிற சம்பவம் இல்லை. அவருக்கு எப்போதுமே கடைசி இருக்கைதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவர் கருவாடு விற்பதால் தொடர்ந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்.
மீனவர்களில் தலைச் சுமடு பெண்களின் பிரச்சனைகள் மிகவும் தனித்த தன்மை கொண்டவை. பொதுச் சமூகத்தால் அவர்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ள இயலாது. பெரும்பாலும், இயற்கைப் பேரிடர்களாலும், துப்பாக்கிச் சூடு போன்ற காரணங்களினாலும் விதவையாகும் மீனவப் பெண்களின் தலைச் சுமடு என்ற தனி வர்க்கம் உருவாகிறது. அவர்களுக்கு மீன் விற்று கிடைக்கும் வருமானமே ஆண்கள் துணையின்றி இருக்கும் குடும்பத்தைக் கரை சேர்க்கும்.
இதில் செல்வ மேரி இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறார், "நான் எப்படி ஆட்டோ எடுத்து மீன் விற்க முடியும்? குறைந்தது 200 ரூபாய்க்கு ஆட்டோ கட்டணம் கொடுத்தால் எப்படி மீன் விற்க முடியும் என்கிறார்.
மீனவப் பெண் தொழிலாளர்களைத் தொழிலாளர் நல வாரியத்தில் இணைக்க வேண்டும். அவர்களுக்கு சங்கங்கள் வேண்டும்
Dayalan Shunmuga
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக