கலைஞர் செய்திகள் . ஜனனி : வளர்ச்சி என்ற பேரில் சாலை போன்ற மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அங்குள்ள மரங்களை வெட்டும் பணி தொடங்கியது. இந்த செயலுக்கு ஆரோவில்லில் உள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர்வாசிகளிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பின.
புதுச்சேரியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆரோவில் நகரம். இதன் அனைத்து பணிகளும் ஆரோவில் ஃபவுண்டேஷன் என்பதன் மூலமே மேற்கொள்ளப்படும்.
அந்த அமைப்பின் தலைவர் பதவிக் காலம் கடந்த நவம்பருடன் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும், நிர்வாகக் குழு உறுப்பினராக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை என 8 பேர் நியமிக்கப்பட்டனர்.
மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிராக பலகட்ட போராட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்தனர். இருப்பினும் மரங்கள் வெட்டும் பணி முடிந்தபாடில்லை. இந்நிலையில், நவ்ரோஸ் மோடி என்பவர் ‘காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் மரங்களை வெட்டவும் சாலை அமைக்கவும் உரிய அனுமதியை பெற்றிருக்க வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கவும் ஆரோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், மனுதாரரின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதால் வழக்கின் முக்கியத்துவத்தை கருதி ஆரோவில் நகரில் மரங்களை வெட்டுவதற்கு டிசம்பர் 17ம் தேதி வரை இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக