சனி, 2 நவம்பர், 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : குண்டர் சட்டம் ரத்து..


tamil.indianexpress.com : Pollachi sexual assault case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து...
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட ஏராளமான பெண்களை சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து காவல்துறை. பின்னர் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து திருநாவுக்கரசுவின் தாயார் லதா மற்றும் சபரி ராஜன் தாயார் பரிமளா ஆகியோர் சார்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தங்கள் மகன்களுக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த மார்ச் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் உத்தரவிட்டார்.

குண்டர் சட்ட அடைத்து பிறப்பிக்க உத்தரவு விதிமுறைகளை முறையாக அரசு பின்பற்றவில்லை. பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும். குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறபித்த உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை என மனுவில் குற்றச்சாட்டுள்ளது. எனவே விதிமுறைகளை பின்பற்றாமல் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த குண்டர் தடுப்பு சட்டத்தில் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார்

கருத்துகள் இல்லை: