செவ்வாய், 3 செப்டம்பர், 2019

கார் விபத்தில், பிரபல புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் சிவா உயிரழப்பு

தவசிஸ்டில்ஸ் சிவாசிவா’னு கையைப் பிடித்தேன்; விழுந்துவிட்டார்!-கண்முன்னே பலியான கேமராமேனை நினைத்து கதறும் நடிகர் தவசி
vikatan.com/ - வீ.சக்தி அருணகிரி :
தேனி மாவட்டம் கோம்பை அருகே கார் விபத்தில், பிரபல புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் சிவா மரணம் அடைந்தார்.
தேனி மாவட்டம், கோம்பை அருகே கார் விபத்தில், பிரபல புகைப்படக் கலைஞர் மரணம் அடைந்தார். இச்சம்பவம் தமிழ்த் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலருடன் பணியாற்றியவர் சென்னையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சிவக்குமார் என்கிற ஸ்டில்ஸ் சிவா. இவர், நேற்று தேனி மாவட்டம் கோம்பை அருகே உள்ள ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற சின்னத்திரை சீரியல் ஒளிப்பதிவில் கலந்துகொண்டு கோம்பையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்குக் காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.
மருத்துவமனையில் தவசி



மருத்துவமனையில் தவசி



திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துவரும் தவசி காரை ஓட்டிவந்துள்ளார். அதிவேகம் காரணமாக ரெட்டை புளியமரம் என்ற இடத்தில் கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சிவா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிவா, உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தவசி உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

சின்னத்திரை சீரியல் தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜரிடம் புகார் பெற்று, அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கி உயிர்பலி ஏற்படுத்தியதாகத் தவசி மீது கோம்பை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீட்டடுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த தவசியிடம் பேசினோம். ``நேற்று மாலை 6 மணிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் பேக்கப் சொன்னார்கள். உடனே, நானும் என் உதவியாளரும் காரில் புறப்படத் தயாரானோம். எங்களுடன் சிவா வந்தார். மூவரும் கோம்பை நோக்கி காரில் வந்துகொண்டிருந்தோம்.






தவசி
எங்களுக்குப் பின்னாலும் முன்னாலும் வாகனங்கள் சென்றுகொண்டே இருந்தன. திடீரென சாலை ஓரத்தில் இருந்த நாய்கள் கூட்டம் சண்டை போட்டுக்கொண்டே சாலை நடுவே வந்துவிட்டது. சட்டென பிரேக் பிடித்தபோது வண்டி தலைகீழாக உருண்டது. `சிவா’னு அவர் கையைப் பிடித்தேன். வேகமாகக் கார் உருண்டதால் கீழே விழுந்துவிட்டார். இரண்டு மூன்று முறை கார் உருண்டு நின்றது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் உயிர் தப்பினோம்… ஆனால், சிவா…!” என்றார் கண்ணீரோடு

கருத்துகள் இல்லை: