

காஷ்மீரில் சிங்களர்கள் பெரும்பான்மையாக இருந்த போதிலும், வட மாகாணத்தில் தமிழர்களே அதிகம். தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும், ஒடுக்குமுறைகள் கூடாது என்பது இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. சம உரிமை கேட்டு, இலங்கையில் நடைபெற்ற நீண்ட உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் கூட, இன்னும் இந்த பிரச்சனை நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது
இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்தால், ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தலையிடும் என்று தான் இத்தனை வருட காலமாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் இப்போது இந்தியா காஷ்மீரில் அதிரடியாக நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில்தான், தற்போது சம்பிக ரணவக பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் இந்தியா ஒரே ஆட்சி என்ற நிலையை நோக்கி நகர்ந்து உள்ளது. அந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளை பார்க்கும்போது, இந்தியாவில் அதிபர் ஆட்சி நடைபெறுவது போன்ற சூழ்நிலை உள்ளது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலை வளர்ந்து வருகிறது. இந்தியாவில் முஸ்லீம் வெறுப்பு அதிகரிப்பதால், இலங்கையில் உள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகள் கோபத்திற்கு உள்ளாவார்கள். இதன் காரணமாக இலங்கையின் வடமாகாண தமிழக அரசியலில் மற்றும் தெற்குப் பிராந்தியத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக இது இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம். இலங்கையின் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இனிமேலும் இந்தியா பேசுவதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
1 கருத்து:
Correct Sir bjp going to hitler way
கருத்துரையிடுக