

மோட்டார் வாகனச்சட்டத்தின் புதிய திருத்தத்தின்படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு தற்போதைய அபராத தொகை ரூ.500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்டுவந்த ரூ.2 ஆயிரம் அபராதம் இனி ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும். இதேபோல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 அபராதமானாது, ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
ஹரியானா மாநிலத்தின் குருகிராம் நகரில் சாலை விதிகளை மீறிய மூன்று ஆட்டோ
ஓட்டுநர்களுக்கு மொத்தம் 73 ஆயிரத்து 400 ரூபாயை (9400, 27000 மற்றும்
37000) போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
இந்த அபராதம் விதிக்கப்பட்டதற்கான ரசீதும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசாரால் வழங்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக