வியாழன், 5 செப்டம்பர், 2019

பார்லே .. டீக்கடையில் டீயோடு மூன்று ரூபாய் பார்லே ஜி பிஸ்கட்டை சாப்பிடுவோருக்கு அதிர்ச்சி!

Ravi Kumar (ரெபெல் ரவி)
‘பார்லே பிஸ்கட்’ கம்பெனி.
மும்பையின் மிகப் பிரசித்தமான ஓரிடம்.
அந்தேரியில் இருந்து தாதர் செல்கிறபோது பார்லே ஸ்டேஷன் வழியாக ரயில் போகும். அப்போது, அந்த பார்லே கம்பெனியிலிருந்து பிஸ்கட்டுகள் உருவாகிற வாசனை, காற்றில் கலந்து நம்மை சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்லும்.

சாதாரணமாக மும்பை ரயில் பயணத்தில் நாம் மூக்கைப் பிடித்துக் கொண்டு தான் போவோம்...ஏனெனில் எல்லாத்தண்டவாளங்களும்...பொதுக்கழிப்பிடங்களே..
ஆனால் பார்லா ஸ்டேசன் வழி மட்டும் விதிவிலக்கு... ரயில் பிரயாணத்தின் மிக அற்புதமான தருணம் பார்லா ஸ்டேஷனைக் கடந்து அந்தேரி போகிறபோது பார்லே கம்பெனியில் இருந்து வருகின்ற அந்த பிஸ்கட்டின் வாசனைதான். இனிமேல் அந்த வாசனை எப்போதும் நமக்கு கிடைக்காது.
ஆம் மும்பை பார்லே பிஸ்கட் கம்பெனி நேற்றோடு மூடப்பட்டுவிட்டது.
(மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால்) கடந்த சில காலமாகவே நட்டத்தில் இயங்கி வந்த இந்த பிஸ்கெட் தொழிற்சாலை, மீள்வதற்கு வேறு வழியில்லாத நிலையில் மூடப்பட்டு விட்டது.
பார்லே கம்பெனி கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நிறுத்திவிட்டது.

87 ஆண்டுகாலமாக இந்தியர்களுக்குப் பிடித்தமான அந்த பார்லே ஜி பிஸ்கெட் இனிமேல் இங்கிருந்து உருவாகாது.
இந்த ஃபேக்டரியில் இருந்துதான் பார்லே 🍪 பிஸ்கெட் தனது பயணத்தைத் துவங்கியது.
மெல்லமெல்ல அது வளர்ந்து இன்று இந்தியாவில் 4 இடங்களில் பிஸ்கட்டு ஃபேக்டரிகளை நிறுவியுள்ளது.
பார்லே பிஸ்கட் கம்பெனி இருப்பதாலேயே இந்த இடத்திற்கு பெயர் வில்லே பார்லே என்று பெயர் சூட்டப்பட்டது.
2006 ஆம்.ஆண்டு ஜூலையில் மாபெரும் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்த போது...இலவசமாக இலட்சக்கணக்கான பார்லே ஜி பிஸ்கெட்டுகளை விநியோகித்த கம்பெனி மூடப்படுகிறது என்கிற செய்தியே நம்மை இடி போலத் தாக்குகிறது..
பார்லே கம்பெனி மூடப்பட்டது மும்பை வாசிகளுக்கும், டீக்கடையில் டீயோடு மூன்று ரூபாய் பார்லே ஜி பிஸ்கட்டை சாப்பிடும் அனைத்து சராசரி இந்தியர்களுக்கும் மாபெரும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாகும்...
இந்த மூடுவிழா..
இப்படியே நின்று விடுமா அல்லது தொடர்கதையாகி மற்ற பல நிறுவனங்களும் மூடப்படுமா...??.
காலந்தான் சொல்லும்...
ரெபெல்ரவி
04/09/19

கருத்துகள் இல்லை: