வெள்ளி, 6 செப்டம்பர், 2019

ஜனநாயகக் கட்டமைப்பு சிதைக்கப்படலாம்!'' - தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜினாமா


vikatan.com - எம்.குமரேசன் : சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருச்சியில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர். யு.பி.எஸ்.சி தேர்வில் தேசிய அளவில் 9-வது இடம் பிடித்தவர். தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், தம் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தட்சின கர்நாடக மாவட்ட (மங்களூரு) ஆட்சியராக இவர் பணிபுரிந்து வந்தார். சென்னையைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில், திருச்சியில் உள்ள இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர். யு.பி.எஸ்.சி தேர்வில் தேசிய அளவில் 9-வது இடம் பிடித்தவர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நான் என் ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியை ராஜினாமா செய்துள்ளேன். இந்தத் தருணத்தில் என் ராஜினாமாவுக்கு யாரும் காரணம் அல்ல என்று மக்களுக்கு விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். என் பணியை முழுமையாகச் செய்யாமல் பாதி வழியில் விலகிச் செல்வதற்காக தட்சின கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
பன்முகத் தன்மைகொண்ட ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்துகொள்ளப்படும்போது, அரசு ஊழியராகப் பணி புரிவது தர்மமற்றது. வருங்காலத்தில் ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கும் போக்கு அதிகரிக்கும். சவால்கள் மிகுந்ததாக இருக்கும். அரசு ஊழியராக இல்லாமல் வெளியே இருந்தேகூட மக்கள் பணி செய்யலாம்'' என்று தெரிவித்துள்ளார்.
வருங்காலத்தில் ஜனநாயகத்தின் அடிப்படைத் தன்மைகளை சிதைக்கும் போக்கு அதிகரிக்கும். சவால்கள் மிகுந்ததாக இருக்கும்.>
தற்போது 40 வயதான சசிகாந்த் முன்னதாக ரெய்ச்சூர், பெல்லாரி, மாவட்டங்களில் பணி புரிந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு கர்நாடக கனிமத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். ராஜினாமா செய்துள்ள சசிகாந்தை, சமாதானப்படுத்தும் முயற்சியில் கர்நாடகாவை ஆளும் எடியூரப்பா அரசு ஈடுபட்டிருக்கிறது.
கடந்த மாதத்தில் கேரளாவைச் சேர்ந்த மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் அரசைக் குற்றம்சாட்டி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இவர் தத்ரா நாகர் ஹவேலியில் பணி புரிந்தவ

கருத்துகள் இல்லை: