செவ்வாய், 18 ஜூன், 2019

மஞ்சை வசந்தன் : களப்பிரர்கள் தமிழை வளர்த்தார்கள் .. சோழர்கள் சமஸ்கிருதத்தையும் பார்ப்பனர்களையும் போற்றினார்கள்


சோழர்கள் காலம் போன்று களப்பிரர்கள் காலம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் ..
தமிழிலே இருக்க கூடிய அத்தனை இலக்கியங்களும் களப்பிரர்கள் காலத்தில்தான் வந்திருக்கிறது .. யாப்பிலக்கண நூல்கள் காக்கை பாடினி , நத்தம்.  பல்காயம்,  பல்காப்பியம் , நரிவிருத்தம் ,   சீவகசிந்தாமணி , பெருங்கலை,  கீழ்கணக்கு நூல்கள் .. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் .. அதில் திருக்குறளும் ஒன்று ..  நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது , திரிகடுகம் ,இனியவை நாற்பது , ஆசாரக்கோவை , பழமொழி நானூறு , திருவஞ்சமூலம் , ஏலாதி , கார் நாற்பது , ஐந்திணை ஐம்பது , திணை மொழி ஐம்பது ,  ஐந்திணை எழுபது , திணை மாலை நூற்றைம்பது  இப்படி தமிழ் இலக்கியத்திலே மக்களுக்கு அறிவு ஓட்டக்கூடிய .. வழி காட்டக்கூடிய நெறி ஊட்டக்கூடிய அத்தனை நூல்களும் இந்த களப்பிரர்கள் காலத்தில்தான் வந்திருக்கிறது .
ஆனால் சோழர்கள் காலத்தில்  இதுபோன்ற அறிவு சார்ந்த மக்களுக்கு நெறி ஊட்டகூடியி நூல்கள் எத்தனை வந்திருக்கிறது?
சோழ மன்னர்கள் காலத்தில் குறிப்பாக ராஜராஜன் காலத்தில் தமிழ் வளர்சிக்காக எதுவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை .. முழுக்க முழுக்க சம்ஸ்கிருத வளர்ச்சியில்தான் அவர்கள் கவனம் செலுத்தினார்கள்.
தமிழ் மொழியில் சம்ஸ்கிருத கலப்புக்கு ... தமிழோடு சமஸ்க்ருத சொற்களை கலந்து மணிப்பிரவாள நடையில் எழுதும் வழக்கம் அதிகமாக அவர்கள் காலத்தில்தான் ஏற்பட்டது என்று ஆய்வாளர்கள் அறுதி இட்டு கூறுகிறார்கள்.
எனவே மொழி என்று எடுத்துகொண்டாலும் இனம் என்று எடுத்துகொண்டாலும் சோழர்கள் பக்தி மயத்திலே சமஸ்கிருதத்திற்கும் பார்ப்பனர்களுக்கும் அளித்த முக்கியத்துவத்தை தமிழுக்கு அளிக்கவில்லை.

சோழமன்னர்கள் மட்டுமல்ல பல மன்னர்கள் வடநாட்டில் இருந்து வந்த பார்ப்பனர்களை தமிழகத்தில் குடியேற்றி இருக்கிறார்கள் .
தஞ்சை பெரிய கோயில் கர்ப்ப கிருகதிற்கு தென்புற சூழல் ஒரு கல்வெட்டு இருக்கிறது அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது :
தஞ்சை ராராஜெச்வர கோயிலில் இருந்து தன் குருவாகிய சர்வசிவ பண்டிதருக்கும்  (வடநாட்டு )அவருடைய சிஷ்யர்கள் வசித்து வரும் கௌடதேசம் , மத்தசாய தேசம் ஆரியதேசம் ஆகிய இடங்களில் வசிக்கும் இவரின் வாரிசுகளுக்கும்  சூரிய சந்திரர்கள் உள்ள வரை ஆண்டுதோறும்  இரண்டாயிரம் களம் நெல் அளிக்குமாறும் முதல் ராஜேந்திர சோழன் ஏற்பாடு செய்திருந்தான் .

கருத்துகள் இல்லை: