சனி, 22 ஜூன், 2019

சஞ்சீவ் பட் .... ஜனநாயகத்தை குழியில் தள்ளி பிஜேபிக்கு வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துகள்


சுமதி விஜயகுமார் : நேற்று முன்தினம் உச்சநீதி மன்றம் Sanjiv Bhatt என்ற
காவல்துறை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. எதற்காக இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பதை அறிய இரண்டு முக்கிய நிகழ்வுகளையும் அதில் இவரின் பங்கையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அந்த இரண்டு நிகழ்வுகளிலும் பிஜேபியின் பங்கு என்ன என்பதை தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம்.
1990 அத்வானியின் ரத யாத்திரை நாம் அனைவரும் அறிந்ததே. அந்த யாத்திரை சென்ற இடமெல்லாம் கலவரங்களை நிகழ்த்தி கொண்டு சென்றதும், அதனை தடுத்து நிறுத்த
அன்றைய பிரதமர் VP Singh பீகார் மாநில முதலமைச்சர் லாலு பிரசாத் மூலம் அந்த யாத்திரையை தடுத்து நிறுத்தி அத்வானியை கைது செய்ததும் வரலாறு.
அப்படி அந்த யாத்திரை பயணத்தின் போது குஜராத்தில் கலவரம் செய்தவர்கள் என நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தது. அதில் ஒருவர் Prabhudas Vaishnani. கைது செய்து 9 நாட்களில் பிணையில் வந்தவர் அடுத்த 10 நாட்களில் உயிரிழந்தார். இதனை அடுத்து காவல்துறை அவரை துன்புறுத்தி கொன்றுவிட்டது என்று வழக்கு தொடரப்பட்டு நீதி மன்றம் 1995ல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதனை தொடர்ந்து 25 ஆண்டுகள் கழித்து இந்த தீர்ப்பு.

சிறை கைதியை துன்புறுத்தி கொண்டுவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த Sanjiv Bhatt தான் 2003ல் சபர்மதி சிறையில் superintendentடாக இருந்தார். அங்கு அவர் பணியில் சேர்ந்து 2 மாதங்களில் பணி மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு காரணம் அவர் கைதிகளுடன் மிக நெருக்கமாக நண்பரை போல பழகுகிறார் என்பதே.
அவரின் பணி மாற்றத்தை எதிர்த்து சுமார் 2000 கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த சம்பவத்திற்கும் இவர் மீது சாற்றப்பட்ட குற்றத்திற்கும் எவ்வளவு முரண்! 2001 முதல் 2016 வரை குஜராத் மாநிலத்தின் சிறையில் இறந்த கைதிகளின் எண்ணிக்கை 180. இதில் இதுவரை ஒரு காவல்துறை அதிகாரிகூட தண்டிக்கப்படாத பொழுது , கைதிகளின் அன்பை பெற்ற Sanjiv மட்டும் தண்டனைக்கு உள்ளாகி இருப்பதற்கு பின்னல் உள்ள அரசியல் என்ன.
குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியின் ஆட்சியில் மிக பிரபலம் குஜராத் கலவரம். 27 பிப்ரவரி 2002ல் கோட்ர என்னும் ரயில் நிலையத்தில் அயோத்தியில் இருந்து திரும்பி கொண்டிருந்த பயணிகள் பெட்டியில் தீ வைக்க பட்டு அதில் 59 ஹிந்துக்கள் கொல்லப்பட்டார்கள்.

அதற்கு காரணம் இஸ்லாமியர்கள் என்று குஜராத்தில் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது பிஜேபி அரசு.
ஆனால் அந்த ரயில் பெட்டிக்கு தீ வைத்தது ஹிந்துக்கள் என்பதற்கு ஆதாரங்களுடன் நிரூபித்தார்கள். (kai po che என்ற திரைப்படம் இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது . வாய்ப்பிருப்பவர்கள் பார்க்கவும்) இஸ்லாமியர்கள் ஹிந்துக்களை கொன்று விட்டார்கள் என்று வழக்கம் போல் மத கலவரத்தை தூண்டி குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என்று இஸ்லாமியர்களை கொன்று குவித்தார்கள்.

இந்த கலவரம் அரங்கேறுவதற்கு முன் குஜராத் காவல்துறையின் முக்கிய அதிகாரிகளை அழைத்து ஹிந்துக்கள் இஸ்லாமியர்களை தாக்கும் பொழுது அவர்களை தடுக்க முற்பட வேண்டாம் என்று மோடி அறிவுறுத்ததாக பிஜேபி மேல் குற்றம் சாட்டியவர்தான் இந்த சஞ்சீவ். முந்நூற்றிக்கும் மேல் சாட்சியங்கள் விசாரிக்க இருந்த போதும் வெறும் 32 சாட்சிகளை வைத்து இந்த தீர்ப்பு வழங்கபட்டுள்ளது . முக்கியமான 3 சாட்சியங்கள் விசாரிக்கப்படவேயில்லை. சஞ்சீவின் மனைவி Shwetha நடு இரவில் தன் கணவருடன் உறங்கி கொண்டிருக்கும் பொழுது, அவர் கணவரை விசாரணை என்னும் பெயரில் படுக்கை அறை வந்து கூட்டி சென்றிருக்கிறார்கள். அவரகள் வீடு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளது என்று வீட்டின் சில இடங்களை இடித்து தள்ளி இருக்கிறார்கள்.
இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது போன்ற எண்ணற்ற,குற்றமற்றவர்களின் கைதுகளை பார்க்கத்தான் போகிறோம் . ஜனநாயகத்தை குழியில் தள்ளி பிஜேபிக்கு வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை: