
“முறையான போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்த பிறகே சம்பந்தபட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கொலை செய்த போலீசைக் காப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினர். அதே போல அப்பகுதியில் பதிவான சிசிடிவி (கண்கானிப்பு) கேமரா பதிவுகளையும் வெளியிடாது முடக்கி வைத்துள்ளது போலீசு
கடந்த திங்கள் முதல் இன்று வரை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களின் துணையோடு தொடர்ந்து போராடி வந்தனர். மேலும் போஸ்ட்மார்ட்டம் செய்யும்போது தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஒரு மருத்துவர் உடற்கூறாய்வுக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
உடற்கூறாய்வு அறிக்கையில் போலீசு தாக்கியதால்தான் விவேகானந்தகுமார் மரணமடைந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதில் “இரண்டிலிருந்து ஆறு வரை உள்ள நெஞ்சு எலும்பு உடைந்திருக்கிறது என்பதும் அவரது மரணத்திற்கு முன்பே, கையில் லத்தியின் அளவுக்கு காயம் (லத்தியால் தாக்கியதால்) ஏற்பட்டதையும், மண்டை உடைந்து காதில் ரத்தம் வழிந்துள்ளதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


சட்ட விரோத போலீசைக் காப்பற்ற முனைந்த சதி மக்களின் போராட்டத்தால் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது. இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி மட்டுமே. அந்த அடிப்படையில் தற்போது விவேகானந்தகுமாரின் உடல் மருத்துவமனையில் இருந்து பெறப்பட்டு, இறுதி நிகழ்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக