வியாழன், 20 ஜூன், 2019

இலங்கை காத்தான்குடி பகுதியை தனி இஸ்லாமிய அரபு ராச்சியமாக ......? கடும் எதிர்ப்பு ..


IBCTamil.com :  கிழக்கை இஸ்லாமிய இராச்சியமாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட பல திட்டங்களை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மூடி மறைத்து அரசாங்கத்தை திசைதிருப்பி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
காத்தான்குடி பகுதியை தனி இஸ்லாமிய நகராக அடையாளப்படுத்தும் நோக்குடன் அரபு நாடுகளைப் போல காத்தான்குடி காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக பேரீச்சை மரங்களை நட்டதுடன் அரபு மொழிகளை முதன்மைப்படுத்தினார். இந்த இஸ்லாமிய இராச்சியம் குறித்த அத்தனை திட்டங்களையும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஊடாக பிரசாரப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்த அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தூண்டியவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளே.
ஆனால் அது தற்போது இஸ்லாமிய தீவிரவாதமாக மாறி தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தும் அளவுக்கு சென்றதன் பின்னர் தற்போது மூடிமறைத்து வேறு காரணங்களை கூறி வருகின்றனர்.

இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களால் கிழக்கை அரபு தேசமாக மாற்றும் திட்டத்துக்கு தங்களது முழுமையான அரசியல் பலத்தை பயன்படுத்தியவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளே
தற்போது கிழக்கில் நடைபெறும் இஸ்லாமிய ஆட்சிக்கு பூரண ஆதரவை வழங்கி தமிழ் மக்களை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அடிமைகளாக்கியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியுமே! அவர்களே இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இன்று தமிழர்களை ஒரு பிரதேச செயலகத்தை கூட தரமுயர்த்துவதற்கு அதிகாரமற்றவர்களாக இந்த அரசாங்கம் மாற்றியுள்ளது என தெரிவித்தார்.
இதேவேளை தெரிவுக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் காத்தான்குடி குறித்து பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்துக்கு அதிகளவில் அரேபிய சுற்றுலாப் பயணிகள் வருவதில்லை எனவும் அந்த பிரதேசம் சுற்றுலாப் பயணிகளை கவரக் கூடிய இடமல்ல எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இன்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் காத்தான்குடியில் அரபு மொழில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளமை குறித்து, குழுவின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஹிஸ்புல்லா, அரேபிய சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால், அவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதால், காத்தான்குடி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அரபு மொழியில் பெயப்ர் பலகைகள் வைக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் குழுவின் உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.
கேள்வி – காத்தான்குடி பிரதேசத்துக்கு அதிகளவில் குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்களா?.
பதில் – ஆரம்ப காலத்தில் அப்படி வந்திருக்கலாம். சில முறை வந்து சென்றுள்ளனர்.
கேள்வி – காத்தான்குடியில் நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றவா?
பதில் – இல்லை.
கேள்வி – அப்படியானால், சாதாரண வாடி வீடுகளில் தங்குவார்களா?
பதில் – ஆம்.
கேள்வி – இதற்கு முன்னர் சாட்சியமளித்தவர்கள். அரபு நாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால், அரபு மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டதாக கூறினர்.
பதில் – அரபு மொழியில் பெயர் பலகைகள், நான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முன்னரே அந்த பிரதேசத்தில் இருந்தன. பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள். ஒரு சிலர் வந்துள்ளனர். பெருமளவில் வருவதில்லை.
கேள்வி – காத்தான்குடி, அரேபியர்கள் சுற்றுலா பயணம் வரும் இடமல்ல?
பதில் – இல்லை. காத்தான்குடி கடல் கொந்தளிப்பானது, அங்கு சுற்றுலாப் பயணிகள் வரும் அளவில் எதுவும் இல்லை. பல இடங்களில் அரபு, ஆங்கிலம், தமிழ் மூன்று மொழிகளில் பெயர் பலகைகள் இருக்கும். சிங்களத்தில் இருக்காது எனக் கூறியுள்ளார்.
IBCTamil.com

கருத்துகள் இல்லை: