செவ்வாய், 18 ஜூன், 2019

கைவிட்ட காதலன் மீது ஆசிட் வீசிய காதலி .. ஜாலியாக இருக்கலாம் வா என அழைத்து ..


tamil.oneindia.com - cjeyalakshmi-lekhaka : டெல்லி: காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆண்கள் ஆசிட் அடித்து சிதைக்கின்றனர். அப்பாவி பெண்கள் ஆசிட் வீச்சுக்கு பலியாகின்றனர். தலைநகர் டெல்லியிலோ காதலித்து ஏமாற்றிய கயவனின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார் ஒரு பெண். நீங்க மட்டும்தான் ஆசிட் அடிப்பீங்களா? நாங்களும் அடிப்போம்ல என்று கிளம்பி விட்டனர் பெண்கள்.
டெல்லி போலீசாருக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் வந்தது. விசாகபுரியில் உள்ள ஒரு இளைஞர் மீது ஆசிட் வீசப்பட்டதாக புகார் கிடைக்கவே, அங்கு சென்ற போலீசார் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த நபருடன் இருந்த பெண் மீது ஆசிட் பட்ட காயங்கள் இருந்தன. அந்த பெண்ணை விசாரித்த போது அடையாளம் தெரியாத சிலர் ஆசிட் வீசி சென்று விட்டதாக கூறி அழுதார். குழம்பிப் போனா போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தினர். குற்றவாளி யார் என்று கண்டுபிடிப்பதால் குழப்பம்தான் ஏற்பட்டது. போலீசார் யோசித்துக் கொண்டிருக்கும் போது பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் கண் விழித்து பேசினார்.
தன்னுடன் இருந்த பெண்தான் தன் மீது ஆசிட் வீசியதாக கூறினார்.
அதைக் கேட்டு காவல்துறையினர் ஷாக் ஆகி விட்டனர். அந்தப்பெண்ணை கைது செய்து விசாரித்த போது, அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சிகரமானதாக இருந்தது. மூன்று ஆண்டுகாலமாக தன்னை காதலித்த அவன், கை கழுவி விடப்பார்த்தான். திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்டும் அவன் மறுத்து விட்டான். என்னை ஏமாற்றிய அவனை பழிவாங்க திட்டம் போட்டேன்.
ஜூன் 10ஆம் தேதியன்று அவனுக்கு போன் செய்து ஜாலியாக இருக்கலாம் வா என்று அழைத்தேன். அவனும் பைக்கில் வந்தான். ஹெல்மெட் போட்டிருந்தான். ஹெல்மெட்டை கழற்றச் சொன்னேன். அவனும் ஆசையாக கழற்றினான். ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவன் முகத்தில் வீசினேன். அவன் முகம் வெந்து போனது. எனக்கும் கையில் பாதிக்கப்பட்டது என்று கூறினார்.
வழக்கமாக ஆண்கள்தான் காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது ஆசிட் வீசுவார்கள். இப்போதே பெண்களும் ஏமாற்றும் ஆண்களுக்கு எதிராக களமிறங்கி விட்டனர். டெல்லியில் காதலன் மீது இளம் பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது

கருத்துகள் இல்லை: