
சென்னை சென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவிலம்பாக்கம், குன்றத்தூர், பெருங்குடி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, நசரத்பேட்டை, தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக