புதன், 27 பிப்ரவரி, 2019

பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்.. ஜெனிவா ஒப்பந்தம் மீறல்! அபிநந்தன் வீடியோ


IndiaStrikesBack | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பால்கோட் என்ற
பகுதியில் இந்திய போர் விமானங்கள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
Tamil.news18.com : ”இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்ற நிலையை உணர்ந்து இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும். பிராந்திய ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இரு நாடுகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம்” என பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
காயமடைந்த இந்திய ராணுவ வீரரைக் காட்சிப்படுத்திய பாகிஸ்தான் ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்ட நடைமுறைகளை மீறியுள்ளதாக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
 அமைதி காக்க வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க், இந்தியா மாற்றும் பாகிஸ்தான் தூதர்களைச் சந்தித்து அமைதி காக்க வலியுறுத்த உள்ளார்.
”இந்திய கமாண்டோ வீரர் அபிநந்தன் ஒருவர் மட்டுமே பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளார். அவரும் ராணுவ நெறிமுறைகளின் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறார்”-
பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் மேஜர் ஆசிஃப் கஃபூர்.

 எதிர்க்கட்சிகள் இணைந்து அளித்துள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் எல்லை மீறிய செயலை அனைத்துத் தலைவர்களும் கண்டிக்கிறோம். காணாமல் போயுள்ள நமது விமானி பாதுகாப்புக்காக நாடு திரும்ப வேண்டும். இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் நேர்மை ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் அரசு அனைத்து வகையிலும் நம்பகத்தன்மை உடன் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் துணை தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து அவர் ஆஜராகினார்.

அனைத்துக் கட்சி கூட்டங்களில் பங்கேற்று வெளியேறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கமான ஜய்ஷ்-இ-முகமது நடத்திய தாக்குதலை இந்தியாவின் 21 எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றன. நமது ராணுவப் படைக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா உடனும் இந்திய ராணுவ வீரர்கள் உடனும் துணை நிற்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை செய்து வைக்கத் தயார்”- துருக்கி

கருத்துகள் இல்லை: