திங்கள், 25 பிப்ரவரி, 2019

எல்லா ஜாதியும் என்னோடதான் .. எல்லோருக்கும் கொடுத்து வச்சிருக்கேன் ... எடப்பாடி பழனிசாமி

eநக்கீரன் :எல்லோருக்கும் கொடுத்தாச்சு! எல்லாத்துக்கும் ஆள் வெச்சுருக்கிறேன்’- பங்காளியிடம் மனம் திறந்த முதல்வர் பழனிச்சாமி
பா.ம.க. தலைவர்  ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்தில் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சேலத்தை சேர்ந்த நெருங்கிய உறவினர் ஒருவர் பேசியிருக்கிறார்.  "தேர்தல் கூட்டணி விஷயத்தில் பங்காளி நீங்க சரியா காய் நகர்த்தீட்டு வர்றீங்க... பா.ஜ.க.வுக்கு பத்து கொடுப்பீங்க... பதினைந்து கொடுக்கற நிலை வரும்னு செய்தி பரவலா இருந்த போது அஞ்சோட முடிச்சது உங்க சாமார்த்தியம் தான் போங்க" என அவர் கூற,  பங்காளிக்கு பதில் கூறிய எடப்பாடி மனம் விட்டு பேசியிருக்கிறார்.



 "பங்கு..,என்னமோ இந்த குடியானவனா எடப்பாடிக்கு எதுவும் தெரியாதுனு என் கூட இருக்கற கட்சிக்காரன் சில பேரே நினைக்கறாங்க. அரசியல்ல தாக்கு புடிக்கிறது சாதாரணமல்ல.    நான் எல்லாத்துக்கும் ஆள் வெச்சுருக்கிறேன். யாரையும் நம்ப முடியாது.  அதுவும் எனக்கு நல்லாவே தெரியும். தமிழ்நாட்டுல இருந்து பி.ஜே.பி. தாமரை சின்னத்துல வெற்றி பெற்று அஞ்சு எம்.பி. டெல்லிக்கு போகனுமா இல்லை தோத்தாலும் பராவ இல்லே அதிக தொகுதிகளில் நிக்கனுமுனு மட்டும் ஆசைப்படறீங்களா? அஞ்சு தான் உங்களுக்கான வெற்றி தொகுதி வேனும்னா உங்க பலம்... பலவீனத்தை இந்தப் பட்டியலில் பாருங்கனு ஒவ்வொரு தொகுதிகளிலும் அவுங்க வாங்கும் ஓட்டு எண்ணிக்கையை பட்டியலா கொடுத்தேன். அதன் பிறகு தான் பியுஸ்கோயல் அஞ்சுக்கு ஒத்துக்கிட்டார்.

பா.ம.க. தி.மு.க. கிட்டே போகாமா தடுத்துட்டேன்.  ஏன்னா நமக்கு வன்னியர் சமூக ஓட்டு மிக முக்கியம்.  எம்.பி. தேர்தலுக்கு மட்டுமல்ல என்னுடைய நோக்கம் நடக்கப் போகும் 21 சட்டமன்ற இடைத் தேர்தல் தான் பா.ம.க. மூலம் இப்போதே எட்டு தொகுதிகளில் வெற்றி உறுதியாகிவிட்டது. மத்தியில காங்கிரஸ் கவருமென்டு வந்தாலும் ஆட்சி மெஜாரிட்டியுடன் அடுத்த ரெண்டு வருடத்திற்கு பிரச்சனை இல்லாம கொண்டு போலாம். எனக்கு இப்ப ரொம்ப திருப்தியாக இருக்குது. கொங்கு மண்டலம் நம்ம பலம் நம்ம சமூக ஓட்டு நமக்கு தான். அடுத்து வன்னியர் ஓட்டும் நமக்குனு முடிவாகிவிட்டது. முதலியார் சமூக ஓட்டு ஏ.சி.சண்முகத்திற்கு சீட் கொடுத்து நிக்க வைக்கிறோம்.  தனி தொகுதிகளில் நம்ம கட்சியில உள்ள தலித் சமூகத்தினரை நிறுத்தறோம்.  அதே போல டாக்டர் கிருஷ்ணசாமி, பாரிவேந்தர்னு எல்லா சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கறோம்.  தேவர் சமூகத்திற்கு ஓ.பி.எஸ். இருக்காரு.   யாருக்கும்  கொறை  இல்லே... திருப்தி எல்லோருக்கும் கொடுத்தாச்சு ..." என கூறியிருக்கிறார்.

 யாருக்கு இந்த டேலன்ட் வரும்? பங்காளி பழனிச்சாமியின் பொலிட்டிகல் பவரே தனிதான்.. என வியந்து போய் கூறினார் எடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த அந்த நண்பர்

கருத்துகள் இல்லை: