செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

Aljazeera வீடியோ .. பாகிஸ்தான் மீதான தாக்குதல்.. ? உண்மையில் என்ன நடந்தது?


Karthikeyan Fastura : எங்க App பொருள்சந்தை மற்றும் பங்குசந்தையில் இருப்பதால் போர் என்ற செய்தி வந்தால் தீர விசாரிக்கவேண்டி உள்ளது.
இன்று நடந்திருக்கும் தாக்குதல் குறித்து இந்திய மீடியாக்களில் வரும் செய்திகள் அனைத்தும் மிகைபடுத்தப்பட்டவை என்று தெரிகிறது.
போர்விமான தாக்குதல் நடந்தது உண்மையே. ஆனால் ஆளில்லாத பகுதியில் தாக்குதல் நடந்திருக்கிறது. இதனால் எந்த உயிருக்கும் பொருளுக்கும் சேதாரமில்லை. பாக் ராணுவமும் பதிலடி கொடுத்திருக்கிறது என்று பாக் தரப்பு ராணுவ அதிகாரி கூறியிருக்கிறார். அவர்கள் சொன்ன விதம் தான் இதில் முக்கியம். இது எப்பவும் நடக்கும் ஒன்று தான் என்பது போல கூறியிருக்கிறார்.
சர்வதேச மீடியாக்கள் அந்த பகுதியில் சென்று அந்த மக்களை பேட்டிகண்டும் நிலவரத்தை படம் எடுத்தும் இருக்கிறார்கள். பாக் சொன்னது போல எந்த சேதாரமும் இல்லை.
அதிகாலையில் வந்த தகவல் பாக் மீது இந்திய போர்விமானங்கள் தாக்குதல் என்பது மட்டுமே என்பதால் பங்குச்சந்தை திறந்த உடன் இறங்கியது. ஆனால் கொஞ்ச நேரத்தில் செய்திகளின் உண்மை தன்மை தெரியவர மீண்டும் முதலீடு குவிந்து சந்தை மேலே வந்துவிட்டது.

இந்திய மீடியாக்களில் இதை மிகப்பெரும் அளவில் ஊதிப்பெருக்க பார்க்கிறார்கள். மக்களுக்கும் இது போன்ற செய்திகளில் இயல்பாகவே நாட்டம் அதிகம் என்பதால் ஒன்றுக்கு பத்தாக அள்ளி விடுகிறார்கள். புதிய தலைமுறை ஆயிரம் கிலோ குண்டுகள் பொழிந்தது என்று கூறியதெல்லாம் ரெம்ப ஓவர்.
BBC, அல்-ஜஸீரா அந்த பகுதியில் சென்று பார்த்துவிட்டு செய்தியை அதன் உண்மை தன்மையோடு எந்த தரப்பு சாய்வும் இல்லாமல் கூறி உள்ளார்கள்.
இதற்கு நடுவில் ஈராக் மீது அமெரிக்க தாக்குதல் நடத்திய வீடியோக்களை எல்லாம் இந்த தாக்குதல் போல சங்கிகள் வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்விட்டரில் பதிந்து வருகிறார்கள்.
பாக் மீதான தாக்குதல் அவ்வளவு எளிதானதும் அல்ல. அது ஒரு மதஅரசியல் கிறுக்கு பிடித்தநாடு. யாரிடமும் முழு அதிகாரம் கிடையாது. ஒரு போர் என்று வந்துவிட்டால் பிரதமர் எல்லாம் அங்கே டம்மி. ஜனாதிபதி ஏற்கனவே டம்மி. ஐஎஸ்ஐயும், ராணுவமும் முழு அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும். அவர்களிடம் தான் அணு ஆயுதங்கள் உள்ளது. அதை Initiate பண்ணும் அதிகாரம் இன்னும் யாரிடம் இருக்கிறது என்று உறுதியாக சொல்லமுடியவில்லை.
இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே விழுந்து நொறுங்கி சில்லுசில்லாக்கி வைத்திருக்கிறார்கள். அதை Gum போட்டு ஒத்திவைத்தது போல இருக்கிறது. முழு அளவில் போர் நடந்தால் 56 இஞ்ச்சின் முதலாளிகள் அம்பானிக்கும், அதானிக்கும் ரெம்பவே அடிவிழுகும். இருந்தும் இந்த தாக்குதல் நடக்கிறது என்றால் பதிலடி நடத்த வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் தான் காரணம். அதனால் தான் வலிக்காத மாதிரி அடித்திருக்கிறார்கள். சென்ற வாரமே இந்த தாக்குதல் நடந்திருக்க வேண்டும். சவூதி பட்டத்து இளவரசர் பயணத்தால் இது தள்ளிப்போடப்பட்டது. இப்போது நடந்திருக்கிறது. அவ்வளவே. இது எல்லா பக்கமும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விஷயம் என்பதால் எந்த பெரிய கண்டனக்குரலையும் சர்வதேச சமூகத்திடம் இருந்து பார்க்கமுடியவில்லை.
அரசியலுக்காக எந்த மோசமான காரியத்தையும் செய்ய தயங்கமாட்டார்கள் இந்த அரசியல்வாதிகள் என்பது தான் இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்.

கருத்துகள் இல்லை: