திங்கள், 25 பிப்ரவரி, 2019

கமல் : ம.நீ.மையத்துக்கு நிதி வழங்குவீர் ! கமல் : அரசியல் என்பது கரைவேட்டி உண்டியல் குலுக்குவது அல்ல! நன்னா சொன்னேள் போங்கோ .

LR Jagadheesan : மத்தவா செஞ்சா உண்டியல் குலுக்கல். நம்மவா செஞ்சா
நிதியுதவி. பேஷ் பேஷ். நன்னா சொன்னேள் போங்கோ.
இதெல்லாம் நமக்கு புதுசா என்ன? அடுத்தவா தட்டுநீட்டினா அது பிச்சை. நாம நீட்டினா அதுக்குப்பேர் தட்சிணை. அரசியல்வாதிகளாவது பகிரங்கமா உண்டியல் தான் குலுக்கினார்கள். அதுவும் கட்சி என்கிற பொது நிறுவன நிதிக்காக. நீங்க தனிப்பட்ட சொத்து சேர்க்க எங்கெங்கே என்னவெல்லாம் குலுக்கினீர்கள் என்று கொஞ்சம் நினைத்துப்பாரும். அதன்பிறகாவது வாய்க்கொழுப்பு குறையுதான்னு பார்ப்போம்.
பிகு: ஜெயலலிதாவும் இதேபோல் உண்டியல் குலுக்கிகள் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளைப்பார்த்து சட்டமன்றத்திலேயே கொக்கரித்தார். இருவரும் ஒரே ஜாதி என்பது தன்னிச்சையானதல்ல. பொதுவாகவே அரசியல்வாதிகள் மீதான உயர்ஜாதிகளின் இதுபோன்ற இளக்காரமான பார்வையின் பின்னிருப்பது நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் மீதான அவர்களின் ஒவ்வாமை. தங்களின் அதிகார கோட்டைகள் வெகுமக்கள் அரசியலால் தகர்ந்துபோனதை ஏற்க மறுக்கும் இயலாமை, ஆற்றாமை தான் இப்படியான வசைச்சொற்களின் உளவியல் தோற்றுவாய்.

கருத்துகள் இல்லை: