
tamil.oneindia.com- aravamudhan.: சென்னை:
பாஜக அதிருப்தி தலைவர்கள் யஸ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா
ஆகியோர் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் ஸ்டாலினை
இன்று சந்தித்து பேசினர்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க
உள்ள நிலையில், கூட்டணிகள் அமைப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து
வருகின்றன. இதனிடையில் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா
முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ்
ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

கடந்த
வாரம் சென்னை வந்த சந்திரசேகர ராவ், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து
உடல் நலம் விசாரித்தார். பின்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து
பேசினார். இது தேசிய மற்றும் மாநில அரசியலில் பெரிய தாக்கத்தை
ஏற்படுத்தியது.
இந்த
நிலையில், பாஜக அதிருப்தி தலைவர்களான முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்
சின்ஹா மற்றும் தற்போது பாஜக எம்பியாக உள்ள சத்ருகன் சின்ஹா ஆகியோர் சென்னை
ஆழ்வார்ப்பேட்டையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை
நடத்தினர்.
அவர்கள்
திமுக தலைவர் கருணாநிதியையும் நேரில் சந்தித்து உடல்நலம் குறி்த்து
விசாரித்தனர். இது அரசியலில் மிக முக்கியமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக