
இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தமிழகத்தில்
தேர்வு மையங்கள் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
வேல்முருகன் சென்னை சிபிஎஸ்இ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு மையம் கூடுதலாக அமைக்கப்படாதததைக்
கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினரும் சென்னை சிபிஎஸ்இ அலுவலகம் முன்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் போராட்டம்
நடைபெற்றது.
இதேபோல் திரைப்பட இயக்குநர் கவுதமனும் தமிழகத்தில் போதுமான அளவுக்கு நீட்
தேர்வு மையங்கள் அமைக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக
மாணவர்களின் மருத்துவ கனவை மத்திய அரசு தகர்க்கிறது என்றும் தமிழக மக்களின்
கல்வி உரிமையயை பறிக்கும் செயல் என்றும் கவுதமன் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக