ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

பீடா கடை வைக்கலாம், மாடு மேய்க்கலாம்!.. அரசு வேலை எதற்கு?.. திரிபுரா முதல்வர் அருள்வாக்கு


Shyamsundar - Oneindia Tamil  கவுகாத்தி: அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் மாடு மேய்க்கலாம் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் கருத்து தெரிவித்துள்ளார். 
இந்தியாவிலேயே மிகவும் ஏழ்மையான முதல்வர் என்று திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பிரபலம் அடைந்து இருந்தார். ஆனால் தற்போதைய புதிய முதல்வர் பிப்லாப் தேப் மிக மோசமான சில சர்ச்சைகள் காரணமாக பிரபலம் அடைந்து வருகிறார். 
 முதலில் அவர், விழா ஒன்றில் பேசும் போது மஹாபாரத காலத்திலேயே இண்டர்நெட் இருந்தது என்று கூறி காமெடி செய்தார். இது இணையம் முழுக்க வைரல் ஆனது. 
அதன்பின் உலக அழகி பட்டம் வாங்கியவரான டயானா ஹெய்டன் ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை, ஐஸ்வர்யாராய்தான் அழகு என்று கருத்து தெரிவித்து சர்ச்சையானார். 
 அதன்பின் சிவில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்குதான் சிவில் சர்விஸ் தேர்வுகள் எழுதும் அளவிற்கு அறிவு இருக்கிறது. 
கட்டிடம் பற்றி படித்தவர்கள் நாட்டை நன்றாக கட்டி அமைப்பார்கள். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அந்த அளவிற்கு அறிவு இருக்கிறது என்று கூறினார். 
இந்த நிலையில் தற்போது அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் மாடு மேய்க்கலாம் என்று கூறியுள்ளார். 
பீடா கடை போடுவது என்பது சுய தொழில், மாடு மேய்ப்பது மிகவும் புனிதமான தொழில், 
ஏன் மக்கள் அரசாங்கத்தை நம்பி வாழ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அதோடு நிறுத்திக் கொள்ளாமல், மாடு மேய்ப்பது, பீடா கடை போடுவதன் மூலம் 5 லட்சம் வரை வருடம் சம்பாரிக்க முடியும். இதற்கு அரசிடம் இருந்து 75,000 ரூபாய் லோன் கூட எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் மோடியின், அமித்ஷாவும் பக்கோடா கடை போடுவது கூட வேலை வாய்ப்புதான் என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: