

இதனைக் கண்டித்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டுறவு வங்கி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் எச்சரித்தனர். ஆனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதால் வங்கியின் நுழைவு வாயிலை பூட்டியக் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டு அப்பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி ஷோபா வேட்பு மனு தாக்கலை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இதுகுறித்து திமுக மாவட்டச் செயலாளர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வேட்புமனு தாக்கல் செய்ய முடியாதபடி தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்துள்ளனர். இதுகுறித்து என்ன சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் பேசி முடிவெடுத்துள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரி காலத்தின் கட்டாயத்துக்குப் பதில் கூறியே ஆக வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
இதுபோலவே சேலம் செவ்வாய்ப்பேட்டை கூட்டுறவு வங்கியில் வேட்புமனு பெறுவதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக