திங்கள், 30 ஏப்ரல், 2018

மீத்தேன் போராட்டத்தை முடக்க முடிவு.? டெல்டா மாவட்டங்களில் 2000 துணை ராணுவத்தினர் குவிப்பு!

Para Military force arrived in Delta region of Tamilnadushyamsundar.tamiloneinda திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில்
2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் அங்கு பதட்டம் அதிகரித்து இருக்கிறது.
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள பகுதிகளில் மக்கள் பல வருடங்களாக இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். தற்போது மக்கள் போராட்டங்களை முடக்க மத்திய அரசு முடிவெடுத்து இருக்கிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் 2000 க்கும் அதிகமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். முக்கியமாக போராட்டம் அதிகம் நடக்கும் திருவாரூர், மன்னார்குடி பகுதியில் அதிக ராணுவத்தினர் உள்ளனர்.
திருவாரூரில் 1000 ராணுவத்தினர் வரை உள்ளனர். முக்கியமாக மாநில அரசுக்கு அறிவிக்காமல் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள. துணை ராணுவத்தினர் வந்ததால் மக்களிடையே பதட்டம் நிலவி வருகிறது.

கருத்துகள் இல்லை: