போலீஸ்காரரின் மகன் இஜாஸ் போலீஸ் நிலையத்தில் தனக்கு இருக்கும் தொடர்பை பயன்படுத்தி அந்த தம்பதியை மிரட்டியதோடு, பெண்ணையும் நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்தது தெரிய வந்தது. இதையடுத்து இஜாசின் தந்தையான போலீஸ்காரரை கொச்சி துறைமுக நகர் போலீஸ் நிலையத்தில் இருந்து அதிரடியாக இடம் மாற்றிய உயர் அதிகாரிகள் பின்னர் இஜாஸ் உள்பட அவரது நண்பர்கள் 7 பேர் மீதும் கற்பழிப்பு, மிரட்டி அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.போலீசார் தேடுவதை அறிந்ததும் இஜாஸ் தலைமறை வாகி விட்டார். மற்ற 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை உயர் அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அல்தாப் என்பவரின் செல்போனை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கொச்சி துறைமுக நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை இதே கும்பல் கூட்டாக கற்பழிக்கும் காட்சியும் பதிவாகி இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அக்காட்சி பற்றி அல்தாப்பிடம் விசாரித்தனர்.
அப்போது அவர், கல்லூரி மாணவியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்று கூட்டாக கற்பழித்ததாகவும், அதனை செல்போனில் பதிவு செய்து அந்த காட்சியை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என மிரட்டி அடிக்கடி அவரை கற்பழித்ததாகவும் கூறினார். இதற்கும் போலீஸ்காரரின் மகன் இஜாஸ் உடந்தையாக செயல்பட்டதாகவும் தெரி வித்தார். dailythanthi.com
ஒரு வழக்கை விசாரிக்க சென்று இன்னொரு கற்பழிப்பு விவகாரம் வெளியானதை கண்டுபிடித்த போலீசார் இதுபோல வேறு பெண்கள் யாரும் இந்த கும்பலால் கற்பழிக்கப்பட்டார்களா? என்பது பற்றி ரகசிய விசாரணையில் இறங்கி உள்ளனர்.
மேலும் போலீஸ்காரரின் மகன் இஜாஸ் பிடிபட்டால் இந்த சம்பவத்தை போல் இன்னும் வேறு சம்பவங்கள் நடந்ததா? என்பதும் தெரிய வரும். எனவே இஜாசை பிடிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது. அவர்கள் இஜாசை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக