கள்ளக்குறிச்சி
சித்த மருத்துவ கல்லூரியை தொடங்கிய சுப்பிரமணியன்
நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் படித்தவர். அவருடைய சொந்த ஊர் சின்னசேலம் அருகே உள்ள பால்ராம்பட்டு.கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் சித்த மருத்துவ ஆஸ்பத்திரி நடத்தி வந்தார். அவரது மனைவியும், கல்லூரி தாளாளருமான வாசுகியின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள செல்லம்பட்டு. இவர் லேப் டெக்னீசியன் மருத்துவ தொழில்நுட்ப கல்வி படித்து இருந்தார். டாக்டர் சுப்பிரமணியன் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.;
1998–ம் ஆண்டு சுப்பிரமணியன் ஒரு சாதராண கூரை கட்டிடத்தில் சித்த மருத்துவ கல்லூரியை தொடங்கினார். 2006–ம் ஆண்டு தமிழக அரசிடம் அனுமதி வாங்கி இப்போதுள்ள சித்த மருத்துவ கல்லூரியை முறைப்படி நடத்தி வந்தார்
ஆரம்பத்தில் கல்லூரியில் 150–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் சேர்ந்தனர். சுப்பிரமணி யன்தான் அனைத்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அவர் ஓரளவு மாணவ–மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்."
ஈரோட்டை சேர்ந்த ஏழை மாணவி ஒருவர் இங்கு படித்தார். அவரால் இடையில் கல்வி கட்டணம் செலுத்த முடியவில்லை. இதனால் அந்த மாணவி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளி யேறினார். சான்றிதழையும் வாங்கி சென்றார்.இந்த சம்பவம் தொடர்பாக சுப்பரமணியனுக்கும், மனைவி வாசுகிக்கும் மோதல் ஏற்பட்டது. 5 ஆண்டு முழு கட்டணத்தையும் வாங்காமல் எப்படி சான்றிதழை திருப்பி கொடுக்கலாம் என வாசுகி தகராறு செய்தார்.<>கல்லூரியை இனிமேலும் நீங்கள் நடத்தினால் சரியாக இருக்காது. நானே நடத்துகிறேன் என்று கூறி முழு நிர்வாகத்தையும் வாசுகி கைப்பற்றிக் கொண்டார். இதற்கிடையே சுப்பிரமணியன் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு நிர்வாகத்தை கவனிப்பதை நிறுத்திக் கொண்டார். வாசுகியிடம் நிர்வாகம் வந்த பிறகு பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
எந்த அடிப்படை வசதிகளும், போதிய ஆசிரியரும் இல்லாத நிலையிலும் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்தும் அங்கீகாரம் கிடைத்தது."
பெரும்பாலான உயர் அதிகாரிகள் கல்லூரி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டனர். நிர்வாகி வாசுகிக்கு முக்கிய அதிகாரிகள் பலர் நண்பர்களாக, இருந்து வந்தனர். இதனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. சில அதிகாரிகள் அடிக்கடி கல்லுரிக்கு வந்து சென்றனர். அவர்களுடன் வாசுகி படம் எடுத்து வைத்து கொள்வது வழக்கம். இதன் மூலம் தனக்கு பெரிய அதிகாரிகள் எல்லாம் நண்பர்கள் என காட்டிக் கொண்டார் கள்ளக்குறிச்சியில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் பெரும்பாலான நேரத்தில் இந்த கல்லுரியில் தான் இருப்பார். யோகாசனம் பழகுவதற்காக இங்கு வந்தேன் என்று அவர் கூறுவார். அதே போல சென்னை மருத்துவ அதிகாரி ஒருவரும் இங்கு அடிக்கடி வருவது உண்டு. அவரும் கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த உயர் அதிகாரி கல்லூரிக்கு ஆதரவாக முழுமையாக செயல்பட்டு வந்தார்.
இதன் காரணமாகதான் மாணவிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த போதிலும் அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. 6 மாதத்துக்கு முன்பு மாணவிகள் தீக்குளிப்பு போராட்டங்கள் நடத்தினார்கள். பின்னர் 6 பேர் விஷம் குடித்தனர். இவ்வளவு மோசமான அளவுக்கு நிலைமை சென்ற பிறகும் கூட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்காததால் தான் 3 மாணவிகள் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளும் கல்லூரிக்கு சாதகமாகவே செல்பட்டு உள்ளனர். கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக 7 வழக்குகள் போலீசில் நிலுவையில் உள்ளன. அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக