ஞாயிறு, 24 ஜனவரி, 2016

தலித் கிட்னியா விற்கவும் முடியாத பனாரஸ்...IIT தலித் மாணவர் கிட்னியை கூட விற்று படிப்பை தொடர....

ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக ஆய்வு மாணவரான
ரோகித்தின் இதனால், மருத்துவ செலவு மற்றும் கல்விக்காக வாங்கிய பணம் என்று மொத்தம் 2.7 லட்ச ரூபாய் கடன் சேர்ந்து விட்டது. இருந்தாலும் படிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார் மகேஷ்.
 இந்தியாவின் பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நடத்தப்படும் விதம் குறித்த விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், ரோகித்தைப் போலவே, தலித் என்கிற ஒரே காரணத்தால் பல்வேறு நெருக்கடிகளால் துரத்தப்பட்டு, தனது கிட்னியைக் கூட விற்க முடியாமல் அவதிப்பட்ட ஒரு ஐ.ஐ.டி மாணவரின் வாழ்க்கை இது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (IIT-BHU) ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்தான் மகேஷ் பால்மீகி(19),
ஆசிரியர்களால்  ‘திறமையான மாணவன்’ என்று பாராட்டப்படும் மகேஷ், கடந்த சில மாதங்களாகவே மோசமான உடல் நல பாதிப்புக்கு உள்ளானார்.


ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் என்ற மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெற்றோரது மூன்று மகன்களில் ஒருவர்தான் மகேஷ், குப்பைகளை சேகரிக்கும் பகுதி நேர துப்புரவாளராக வேலை பார்த்துக் கொண்டேதான் பத்தாம் வகுப்பில் 85 சதவீத மதிப்பெண் வாங்கினார். பின்னர், 12-ம் வகுப்பிலும் 70 சதவீத மதிப்பெண் பெற்றார். வேலை,படிப்பு என்று தொடர்ந்து தூக்கமின்றி அலைந்ததால் இவரது உடல் நலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

இந்த சூழலில்தான், கடினமான ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நுழைந்தார் மகேஷ். தன் கனவு நிறைவேறிவிடும் என்று நம்பியவருக்கு அண்மையில் மீண்டும் ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் படிப்பை தொடர முடியாத நிலை. இதனால் நெருங்கிய நண்பர்களின் உதவியால் கள்ளச்சந்தையில் தனது கிட்னியைக் கூட விற்க முயற்சி செய்தார். இதற்காக, வாரணாசி மற்றும் அவரது சொந்த ஊரான அல்வாரில் கிட்னியை விற்று படிப்பைத் தொடரலாம் என்ற நம்பிக்கையுடன் 5 மருத்துவமனைகளுக்கு சென்றார். ஆனால் அங்கு இருந்த மருத்துவர்கள் அனைவருமே சொன்னது ஒன்றுதான்,  “நீ தலித் என்பதால் உன்னுடைய கிட்னி விலை போகாது.”.

வேறு வழியில்லாமல் படிப்பை விட்டு விட்டு, தனது சொந்த ஊரிலேயே மாதம் 4 ஆயிரம் ரூபாய்க்கு துப்புரவாளராக வேலை பார்க்கத் தொடங்கினார் மகேஷ். இந்த நிலையில்தான், மகேஷின் நண்பர்கள்  ‘மகசேசே’ விருது பெற்ற செயற்பாட்டாளர் சந்தீப் பாண்டேவிடம் இவரது இவரது நிலைமையை எடுத்துக் கூறினர். அவர் பனாரஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் உதவியுடன் கடன்களை அடைத்து மகேஷ் மீண்டும் கல்வி பயில உதவி செய்துள்ளார்.

இது குறித்து மகேஷ் அளித்துள்ள பேட்டியில் “சந்தீப் சார், என்னுடைய எல்லாக் கடனையும் அடைத்து விட்டார். நம் நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் எல்லாம் இன்னும் நூற்றுக்கணக்கான ரோகித்துகள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் அவர்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். என்னைப் போன்ற வெகு சிலருக்கு மட்டுமே சந்தீப் சார் போன்ற ஆட்கள் அறிமுகமாகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தை வீட்டில் இருக்க, வயதான தாய் வீடு வீடாக சென்று வேலை பார்த்து வர, இப்போதும் துப்புரவு பணி செய்து கொண்டேதான் தன் கனவுப்படிப்பை படித்து வருகிறார் மகேஷ். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: