திங்கள், 25 ஜனவரி, 2016

அண்ணா பல்கலை என்ஜினீயரிங் மாணவி உயிரிழப்பில் சந்தேகம் என புகார்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவ–மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். இங்கு திருவாரூரை சேர்ந்த சண்முகப்ரிதா (19) என்ற மாணவியும் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார். பி.டெக் 2–ம் ஆண்டு படித்து வந்த இவர் பல்கலைக்கழக விடுதியில் 2–வது மாடியில் அறை எண். 203–ல் தங்கி இருந்தார். இவருடன் மதுமிதா, பிருந்தா, கார்த்திகா என்ற மாணவிகளும் தங்கி உள்ளனர். நேற்று இரவு 10.40 மணி அளவில் சண்முகப்ரிதா தனது அறையை விட்டு வெளியில் வந்து வராண்டாவில் நின்றபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சண்முகப்ரிதா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சண்முகப்ரிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோட்டூர்புரம் போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சண்முகப்ரிதா உயிழந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக் கப் பட்டது. இதையடுத்து திருவாரூரில் இருந்து அவரது உறவினர்கள் சென்னைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சண்முக ப்ரிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்நிலையில் மாணவ சண்முகப்ரிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர் nakkheeran,in

கருத்துகள் இல்லை: