லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்
ஒருவர் அவரது இரு மகள்களுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும்
தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனின் ருஸ்லிப் பகுதியில் வசித்து வந்தவர் ஹீனா. இவருக்கு ஜாஸ்மின் (9), ப்ரிஷா (4) என இரு மகள்கள் இருந்தனர்.
தனது கணவரின் பெற்றோருடன் வசிக்க
ஹீனாவிற்கு விருப்பம் இல்லை என கூறப்பட்ட நிலையில், அவர் தனது இரு
மகளுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை
செய்துக்கொண்டார்.
இத்துயர சம்பவம் குறித்து தெரிவித்த ஹீனாவின் கணவர் கல்பேஷ், ‘நானும்
ஹீனாவும் எங்கள் மகள்களோடு நிம்மதியாக வாழ்ந்தோம். அவள் இறப்பதற்கு முன்பு
வரை அவள் மகிழ்ச்சியாக இருந்ததாகவே நான் எண்ணினேன்.
நாங்கள் என் பெற்றோருடன் வசித்துவந்தது
ஹீனாவிற்கு பிடிக்காது என எனக்கு தெரியும். ஆனால், அவள் எப்போதும் தனது
வாழ்வை முடித்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததில்லை. இச்சம்பவம் எனக்கு
மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என கல்பேஷ் தெரிவித்தார்.
ஹீனாவின் தோழியான பிரனாலி சாம்பிரே
கூறுகையில், தனது மாமனார் கடுமையாக நடந்துகொள்வதாக ஹீனா தன்னிடம்
தெரிவித்தாக கூறியுள்ளார். ஒரு சந்தர்ப்பந்தத்தில் ஹீனா கதறி அழுததாகவும்
கூறிய பிரனாலி, ஆனால் இப்படி தற்கொலை செய்து கொள்வார் என்று தான்
எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.மாலைமலர்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக