சனி, 1 நவம்பர், 2014

மோடி :பட்டேல் பிறந்த நாளில் சீக்கியர் படுகொலை இதயத்தில் ஈட்டிபாச்சியது!

புதுடில்லி: ''தேச ஒற்றுமைக்காக பாடுபட்ட, இந்தியாவின் இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில், 30 ஆண்டுகளுக்கு முன், நாட்டின் ஒற்றுமையையே உலுக்கும் விதத்தில், சீக்கியர் படுகொலை சம்பவம் நடைபெற்றது. அது, குறிப்பிட்ட அந்த மதத்தினர் மனதில் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை; பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, நம் நாட்டின் இருதயத்தில், ஈட்டியை பாய்ச்சியது போல் ஆகிவிட்டது,'' என, பிரதமர்
நரேந்திர மோடி பேசினார்.  அதே போன்றுதான் குஜராத்தில் நடந்த இனக்கலவரமும் இதயத்தில் பாய்ந்த ஈட்டி போல அல்லாமல்..பேக்கரி எரிப்பில் கொல்லப்பட்டவர்களை பற்றியும்..ஓர் மதத்தை சார்ந்தவர்களை குறிவைத்து கர்ப்பிணி பெண் என்றுகூட பாராமல் கொல்லப்பட்டதையும் நிச்சயம் நினைவு கூறுவார்கள் வருங்கால பிரதமராக யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி. காலம் மாறினாலும் பட்ட காயங்கள் மாறாது வடுவாக ரணமாக வலிக்கவே செய்யும். படேலுக்கு பிரம்மாண்டமான சிலையை வைப்பதை யாரும் விமர்சிக்காமல் இருக்க இதுபோன்ற பேச்சுக்கள் துணை நிற்கும் என்று எண்ணி பேசிய பேச்சு இது. ஈட்டியாய் குத்தப்போகும் செலவு (3000 கோடி)இந்த பிரம்மாண்டமான சிலைக்கு. அதனால்தான் இப்போதிருந்தே பாசத்தை கொட்டுகின்றார் பிரதமர்..வேஷக்கார பிள்ளை..ரோஷமில்லை இது..வேஷம்..
நாட்டின், முதல் உள்துறை அமைச்சர், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான, அக்., 31ம் தேதியை, பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடுகிறது.

இந்த நாளில், டில்லியில் நேற்று, ஒற்றுமை ஓட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர்கள், பிரபலங்கள் மற்றும் மாணவர்களுடன், சிறிது தூரம் ஓடிய பிரதமர் நரேந்திர மோடி, மேலும் பேசியதாவது:இந்த நாட்டிற்காக, சர்தார் படேல் மேற்கொண்ட சாதனைகளை, யாரும் எப்போதும் மறக்க முடியாது. அவரின் செயல்கள், சாணக்கியரின் செயல்களை ஒத்திருந்தன. பல நுாறு ஆண்டுகளுக்கு முன், பல நாடுகளை ஒன்றிணைத்த சாணக்கியர் போல, சுதந்திரத்திற்கு பின், சிதறிக் கிடந்த இந்தியாவை ஒருங்கிணைத்தவர் படேல்.அவரின் சாதனைகள் மறைக்கப்பட்டன. அவரை, பலரும் வசைபாடினர். எனினும், தன் குறிக்கோளில் அவர் உறுதியாக இருந்தார். பல இடையூறுகள் வந்த போதிலும், நாட்டின் ஒற்றுமையை, சர்தார் படேல் விட்டுக் கொடுக்கவே இல்லை.ராமகிருஷ்ண பரமஹம்சரையும், விவேகானந்தரையும், எப்படி தனித்து பார்க்க முடியாதோ, அது போலவே, மகாத்மா காந்தியடிகளையும், சர்தார் வல்லபாய் படேலையும், பிரித்து பார்க்க முடியாது.இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய, மத்திய அமைச்சர் வெங்காய நாயுடு, ''நாட்டின் முதல் பிரதமராக, சர்தார் படேல் பொறுப்பேற்றிருந்தால், நாட்டின் வரலாறே வேறு மாதிரியாகி இருக்கும். இது, என் கருத்து மட்டுமல்ல; பலரும் அவ்வாறு கூறுகின்றனர்,'' என்றார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: