இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும்
ஒரு அரசியல் கட்சியைச் BJP சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம்,
கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து,
துவம்சப்படுத்தினர்.
அந்த ஓட்டலில் இளம்வயது ஆண்களும், பெண்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து
கொண்டதால், நாங்கள் தலையிட நேர்ந்தது என தாக்குதல் நடத்தியவர்கள்
தெரிவித்தனர்.
இந்த காட்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் கடந்த 23-ம் தேதி
ஒளிபரப்பியதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
கலாச்சார பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சட்டம்-ஒழுங்கை சிலர் தங்களது
கையில் எடுத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதை ஆதரித்தும்,
கண்டித்தும் கேரள மக்களிடையே பரபரப்பான பட்டிமன்றங்கள் நடைபெற்று
வருகின்றன.
இந்நிலையில், வரும் நவம்பர் 2-ம் தேதி, மாலை 5 மணியளவில் கொச்சி நகரில்
உள்ள கடற்கரையோர உணவகம் ஒன்றின் பொதுவெளியில் ஆணோடு பெண்கள் கட்டியணைத்து,
முத்தமிடும் திருவிழாவுக்கு ‘ஃபேஸ்புக்’ மூலம் ஒரு அமைப்பு அழைப்பு
விடுத்துள்ளது.
’கிஸ் ஆஃப் லவ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ‘ஃபேஸ்புக்’ பக்கத்தில் இதுவரையில் 2,722 பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர். 8,510 பேர் ‘லைக்’ தெரிவித்துள்ளனர். இதே நாளில் கோழிக்கோடு, திரிச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் இந்த ‘முத்தத் திருவிழா’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான செய்தி பரவத் தொடங்கியதும் இந்த கலாச்சார சீர்கேட்டுக்கு போலீஸ் சட்டங்களின் மூலம் தடை விதிக்க வேண்டும் என இரு மாணவர்கள் கேரள ஐகோர்ட் அமர்வின் முன்னர் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவினை நேற்று விசாரித்த நீதிபதிகளிடம் கருத்து தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனையடுத்து, இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
இந்நிலையில், ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டவாறு நாளை (2-ம் தேதி) மாலை 5 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று ’கிஸ் ஆஃப் லவ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், பிரபல குறும்பட இயக்குனருமான ராகுல் பசுபாலன் இன்று அறிவித்துள்ளார்.
கலாச்சார காவலர்கள் என்று கூறிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவோரை கண்டிக்கும் வகையில் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி, சுமார் 500 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக