செவ்வாய், 28 அக்டோபர், 2014

கத்தி பட 2 ஜி ஸ்பெக்ட்ரம் வசனம் ! வழக்கு பாய்கிறது ! நீதிமன்ற அவமதிப்பு , நாட்டுக்கு அபகீர்த்தி ....

2 ஜி வழக்கு குறித்த வசனம்: கத்தி படத்திற்கு எதிராக வழக்கு நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு எதிராக மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மதுரை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர், வக்கீல் ராமசுப்பிரமணியன். இவர் மதுரை மாவட்ட 6வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 27-ந்தேதி அன்று மதுரையில் ஒரு தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும், 2 ஜி வழக்கை சுட்டிக்காட்டி வசனம் பேசப்படுகிறது. நிலுவையில் உள்ள அந்த வழக்கை பற்றி அவர்,2 ஜி-ன்னா என்னானு தெரியுமா? வெறும் காத்த மட்டும் வச்சு கோடி கோடியா கொள்ளையடிச்சவங்க உள்ள ஊருடா...என்று இந்தியாவைப் பற்றியும் நாட்டை ஆட்சி செய்தவர்களை பற்றியும் இந்த திரைப்படத்தில் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை பற்றி பிரபல ஊடகமான திரைப்படத்தில் பிரபலமான நடிகர் விஜய் பேசியுள்ளார். இது தற்போதைய அரசின் ஆதாயத்தை தேட வேண்டும் என்ற எண்ணத்தில் பேசியது. நீதித்துறையை அவமதிக்கும் செயல். உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செயல். இந்தியா ஊழல் நிறைந்த நாடு என்று சித்தரித்து இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.திரைப்படத்தை எடுத்தவர்கள், சட்டம் படித்த நீதிபதி போலவும், தாங்களே 2 ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிவிட்டதை போலவும் பேசியவிதம் சட்டத்தை மதித்து நடக்கும் அனைவருக்கும் மனவேதனையை ஏற்படுத்தி உள்ளது.எனவே அந்த திரைப்பட நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், லைகா புரொடக்சன்ஸ் தலைமை நிர்வாகி, திரையரங்கு நிர்வாகி ஆகியோரை இந்திய தண்டனை சட்டம் 500-ன் படி தண்டிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு இன்று மாஜிஸ்திரேட்டு மாரீசுவரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவர், விசாரணையை அடுத்த மாதம் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: