வியாழன், 30 அக்டோபர், 2014

கலைஞர் அறிக்கைக்கு பின் பன்னீர்செல்வம் 60 கோடியை நிவாரண பணிக்கு அறிவித்தார்!

நான் யோசனை கூறிய பின், 60 கோடி ரூபாய், வெள்ள நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் என, முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தாரே தவிர, முன்கூட்டியே யோசித்து, தமிழக அரசு தானாக அறிவிக்கவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
நான் வெளியிட்டது வெற்று அறிக்கை என்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம். தமிழக மக்கள், மழை வெள்ளத்தினால், பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் மூழ்கிக் கிடப்பதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவர்களுக்கு உதவிட வேண்டும் என, நான் அறிக்கை வெளியிட்டது, பன்னீர்செல்வம் மொழியில் வெற்று அறிக்கையாம்.நான் யோசனை கூறிய பின், 60 கோடி ரூபாய் நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் என, முதல்வர் தெரிவித்திருக்கிறாரே தவிர, இந்த அறிவிப்பை கூட தமிழக அரசு தானாகவே முன் கூட்டியே யோசித்து அறிவிக்கவில்லை என்பது தான் உண்மை.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.dinamalar,com மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தாலும் அதற்கு மூல காரணமாக இருப்பவர் கலைஞர் தான் என்பது நிதர்சனம். அவரது சொல்லுக்கு பின்பே அதிமுக அரசு அசைந்து கொடுக்கும் என்பது பாலகர்களுக்கும் தெரிந்தது தான்.

கருத்துகள் இல்லை: