வியாழன், 15 டிசம்பர், 2011

மதுரையில் மலையாளிகள் நிறுவனங்களை மூட நடவடிக்கை?

மதுரை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தீரும் வரை மதுரையில் உள்ள மலையாளிகளின் நிறுவனங்களை மூடுவது குறித்து அரசுக்கு தெரிவித்துவிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் சகாயம் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மலையாளிகளின் கடைகள், நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. மதுரையிலும் மலையாளிகளின் கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். இதனால் மலையாளிகளின் கடைகளை அரசே மூட வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர்கள் அம்மாவட்ட ஆட்சியர் சகாயத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.
மதுரை வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராமசாமி தலைமையில் 200 வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் சகாயத்தை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். மலையாளிகள் நடத்தும் தனியார் நிறுவனங்களை உடனே மூட உத்தரவிட வேண்டும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தீரும் வரை அந்த நிறுவனங்களைத் திறக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
அதற்கு சகாயம் கூறுகையில், எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. அதனால் இதை அரசின் கவனத்திற்கு கொண்ட சென்ற பிறகு உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

கருத்துகள் இல்லை: