ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

'அவுங்களுக்கு 50 கோடி அவுட்Saravana stors கணக்கு வழக்குகள் இல்லாமல் ரொம்பவே நெளிந்தார்கள்


அங்காடித் தெருவில் ஐ.டி-யின் அதிரடி!

சென்னை சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துக் கடைகளிலும், கடந்த வியாழன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினார்கள். இது குறித்து பேசும் வருமான வரித்துறையினர்,''தீபாவளி விற்பனையைக் கணக்கிட்டு, இப்போதே பலகோடிகளைக் கொட்டி, குடோன்களில் மலை அளவு கணக்கில் இல்லாமல் ஸ்டாக் வைத்து இருப்பதாக போட்டியாளர்களிடம் இருந்து ஆதாரத்துடன் பல்வேறு புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்தே இந்த ரெய்டு. கணக்கு வழக்குகள் சரியாக இல்லாமல் ஊழியர்கள் ரொம்பவே நெளிந்தார்கள். பல ஆவணங் களைக் கைப்பற்றியிருக்கிறோம்'' என்றார்கள்.
'அவுங்களுக்கு 50 கோடி அவுட்’ என்று போட்டியாளர்கள் ஜாலி காட்ட... 'இங்க எப்ப வருவாங்களோ?’ என இன்னும் சில பெரும்புள்ளிகள் கிலி பிடித்துக் கிடக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: