வியாழன், 2 ஜூன், 2011

ஜெயலலிதா பதவியை ராஜினாமா செய்துவிட்டா வழக்கை சந்திக்கிறார்? திமுக கேள்வி

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது, முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, ஊழல் வழக்குகளுக்காக முதல் அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டுதான் அவர் நீதிமன்ற வழக்கை சந்தித்தாரா என்றும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்களுக்கு திமுக தீர்மானக் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மீது பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சொத்து குவிப்பு வழக்கு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்தாரா?
எனவே ஜெயலலிதா இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் முன்னர், தன்னைப் பற்றியும் தம்மீது உள்ள ஊழல் வழக்குகளைப் பற்றியும் சிந்திக்காமல் பேட்டியளிப்பது அறிவுடைமையாகாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: