செவ்வாய், 31 மே, 2011

அரசியலில் இருந்து விலகினார் தலாய் லாமா

தர்மசாலா : புத்தமத தலைவர் தலாய் லாமா தீவிர அரசியலில் இருந்து முறைப்படி விலகினார். சீனாவின் பிடியில் இருந்து திபெத் விடுதலைக்கு குரல் கொடுத்து வரும் தலாய் லாமா, இந்தியாவில் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தங்கியுள்ளார். திபெத்தின் நாடு கடந்த நாடாளுமன்றத்தை திபெத்தியர் நடத்தி வருகின்றனர். அரசியல் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாகவும், நாடாளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்க விரும்புவதாகவும் தலாய் லாமா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி, திபெத் நாடாளுமன்றத்துக்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. உலகெங்கும் உள்ள 40 ஆயிரம் திபெத்தியர்கள் ஓட்டளித்து, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரதமராக லாப்சங் சாங்கே என்பவரையும் தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில், திபெத்தின் அரசியல் பொறுப்பில் இருந்து தலாய் லாமா முறைப்படி விலகினார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் தலாய் லாமாவிடம் இருந்து வந்த அதிகாரங்கள் மத்திய திபெத்திய நிர்வாகக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் தலாய் லாமா கையெழுத்திட்டுள்ளார். இனி தலாய் லாமா அவரது விருப்பப்படி புத்த மத தலைவராக மட்டுமே நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடடா இவரை பலரும் ஆன்மிக குரு என்றல்ல எண்ணியிருகிரர்கள். இவர் வெறும் அரசியல்வாதிதான் . ஆனால் என்ன ஆன்மிக போர்வை போர்த்த அரசியல்வாதி.

கருத்துகள் இல்லை: