வியாழன், 2 ஜூன், 2011

ஜெயலலிதா மீது திமுக பாய்ச்சல்,தயாநிதி மாறனை எப்படி பதவி விலகச் சொல்லலாம்

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் புதிதாக சிக்கியுள்ள தயாநிதி மாறனை பதவி விலகச் சொல்ல முதல்வர் ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று திமுக கூறியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான பொன்முத்துராமலிங்கம் மற்றும் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், தன் மீது உள்ள வழக்கை சந்திக்க தனது முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்ய மாட்டார். ஆனால் தயாநிதி மாறன் மட்டும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமா. மக்கள் இதைப் புரிந்து கொள்வார்கள்.

பெங்களூர் கோர்ட்டில் தன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருப்பதை ஜெயலலிதா முதலில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த வழக்கை சந்திக்க அவர் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன் பிறகு மற்றவர்களின் ராஜினாமாவை அவர் கோரலாம் என்று கூறியுள்ளனர் அவர்கள்.

English summary
The DMK today came out in support of Textiles Minister Dayanidhi Maran, embroiled in a controversy over alleged pay-offs in the 2G spectrum allocation and slammed Tamil Nadu Chief Minister Jayalalithaa for demanding his resignation. "Jayalalithaa won't quit as Chief Minister to face a court case, but should Maran do the same? People will understand this," the DMK said in a statement. In a joint statement, party spokespersons Pon. Muthuramalingam and K S Radhakrishnan sought to remind Jayalalithaa that she herself was facing a disproportionate assets case in a Bangalore court. On Jayalalithaa's demand for Maran's resignation, they said it would not be proper on her part to make such statements without considering that she herself was facing corruption charges. 
 

கருத்துகள் இல்லை: