புதன், 1 ஜூன், 2011

சாய்பாபா தனி அறை : நீடிக்கும் ரகசியம்

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா மறைந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் உள்ள அவரது தனி அறையான யஜூர் மந்திர் தொடர்பான மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.
சாய்பாபா மார்ச் 28-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து யஜூர் மந்திர் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. அதன் சாவிகள் பிரசாந்தி நிலைய பொறுப்பாளர் சத்யஜித்திடம் இருந்தது. சாய்பாபா ஏப்ரல் 24-ல் மறைந்தவுடன் அந்த சாவிகளை அவர் சத்ய சாய் அறக்கட்டளையின் செயலர் சக்ரவர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சாய்பாபா தனி அறை : நீடிக்கும் ரகசியம்<புட்டபர்த்தி சத்ய சாய்பாபா மறைந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் உள்ள அவரது தனி அறையான யஜூர் மந்திர் தொடர்பான மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.சாய்பாபா மார்ச் 28-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து யஜூர் மந்திர் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. அதன் சாவிகள் பிரசாந்தி நிலைய பொறுப்பாளர் சத்யஜித்திடம் இருந்தது. சாய்பாபா ஏப்ரல் 24-ல் மறைந்தவுடன் அந்த சாவிகளை அவர் சத்ய சாய் அறக்கட்டளையின் செயலர் சக்ரவர்த்தியிடம் ஒப்படைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது முதல் யஜூர் மந்திருக்கு எப்போதும் இல்லாத பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. சாய்பாபாவின் அறையில் பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய தங்கநகைகளும், கணக்கிலடங்கா ரொக்கப் பணமும் உள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன.
பாபாவின் நினைவிடம் கட்டுவதற்காக பிரசாந்தி நிலையத்தை 6 வாரங்கள் மூடுவதாக அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னதாக அறிவித்திருந்தனர். அவர்கள் மீண்டும் மந்திரை திறப்பது குறித்தும், திறக்கும்போது பொதுமக்களையும், ஊடகங்களையும் அங்கு அனுமதிப்பது குறித்தும் நேற்று கூடி விவாதித்தனர்.
எனினும் அறக்கட்டளையின் அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகாததால் மந்திரை திறப்பது குறித்து இதுவரை முடிவு எதுவும் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவித்தன. எனினும் உள்ளூர் தலைவர்கள் யஜூர் மந்திரைத் திறக்குமாறு அறக்கட்டளையை வலியுறுத்தி வருகின்றனர்.
யஜூர் மந்திரின் உள்ளே என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதன் உள்ளே விலைமதிப்பில்லாத பொருட்களும், சாய்பாபாவுக்கு சொந்தமான ஆன்மீகப் பொருட்களும் இருக்கலாம்.

அவர்கள் ரகசியத்தை தொடர்ந்து காப்பாற்ற முடியாது. சாய்பாபாவின் அறையை முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் திறக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாகி ரெட்டி கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை: