வியாழன், 2 ஜூன், 2011

எகிப்திய நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனை!


எகிப்திய நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதாக அந்நாட்டின் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் அங்கு நடைபெற்ற அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கு பற்றிய போது தம்மை இத்தகைய பரிசோதனைக்குட்படுத்தியதாக மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மேற்படி குற்றச்சாட்டை மேஜர் அம்ர் இமாம் மறுத்துள்ளார் . 17 பெண்களை கைது செய்த போதும் அவர்களுக்கு கொடுமையோ கன்னித்தன்மை பரீட்சையோ செய்யவில்லை எனத்தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை அடித்தும் ,மின் அதிர்ச்சி கொடுத்தும்,ஆடைகள் களையப்பட்டு பரிசோதனை செய்தும் விபச்சாரப் பட்டம் சூட்டியும் ,கன்னித்தன்மையை பரிசோதிக்குமாறு கட்டயாப்படுத்தப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. ஆனால் சிரேஸ்ட அதிகாரி கன்னித்தன்மை பரிசோதித்தமை உறுதி செய்யப்பட்டமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: