- சிவனேசன் ரொரன்ரோ
மேமாதத்தை எடுத்துக்கொண்டால் புலிகள் இயக்கம் தனக்குதானே மண்ணை அள்ளிப்போட்ட மாதம் எனலாம். தற்கொலைத்தாக்குதல் மூலம் இரண்டுநாட்டின் தலைவர்களை படுகொலை செய்ததன்மூலம் உலகநாடுகளின் கண்டனத்திற்கும் பயங்கரவாதப்பட்டியலிலும் சேர்க்கப்பட்டார்கள்.
மேமாதம் -21-திகதி 1991ம்ஆண்டு இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் உள்ள சிறிபெரம்புதூரில் தேர்தல் பிரச்சாரமேடையில் வைத்து புலிகளின் பெண்தற்கொலைதாரியான தனுவால் படுகொலை செய்யப்பட்டார் இந்த பெண்தற்கொலைதாரி காலம்சென்ற தமிழரசுக்கட்சி பிரமுகரான இராசரத்தினத்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேமாதம் 01ந்திகதி 1993ம்ஆண்டு மேதின ஊர்வலத்தில் வைத்து இலங்கை ஜனாதிபதி பிறேமதாசா புலிகளின் தற்கொலைத்தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
மேமாதம் 07 1990ம்ஆண்டு ஈ.பி.ஆர்;எல்.எப் பாராளுமன்ற உறுப்பினர் சாம்தம்பிமுத்துவும்; அவரது மனைவி கலாவும் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்;. அந்தக்காலம் சிறிலங்கா அரசுடன் விடுதலைப்புலிகள் தேனிலவு கொண்டாடிய காலம் இந்த தேனிலவு நேரத்தில்தான் தமிழ்த்தலைவர்களான அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் கொல்லப்பட்டனர்.
மேமாதம் 06 1986டெலோ இயக்கத்தலைவர் சிறிசபாரட்ணத்தை புலிகள் சுற்றி வளைத்தபோது புலிகளின் தளபதி கிட்டுவிடம் பிரச்சினை இருந்தால் பேசித்தீர்ப்போம் என்னைக்கொல்லாதே என்று உயிர்ப்பிச்சை கேட்டபோதும் இது பிரபாகரனின் உத்தரவு என்று கூறிவிட்டு தனது உபஇயந்திரதுப்பாக்கியால் சரண்அடைந்தவருக்கு இரக்கம்காட்டாமல் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தநேரத்தில் நூற்றுக்கணக்கான டெலோஉறுப்பினர்கள் கொலைசெய்யப்பட்டும் அரைஉயிருடன் டயர் போட்டு கொழுத்திய கொடுமையையும் இலகுவில் மறந்துவிட முடியாது.
மேமாதம் 18 1998ம்ஆண்டு தமிழர்விடுதலைக்கூட்டணியைச் சேர்ந்த பெண்மணியான யாழ்ப்பாண மாநகரசபை மேயர் சரோஐpனி யோகேஸ்வரன் அவர்கள் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது கணவரான எம்.பி.யோகேஸ்வரனும் ஏற்கனவே புலிகளால் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. தனது நெருங்கியவர்களுக்கு பிரபாகரன் என்னை ஓன்றும் செய்யமாட்டார் என்று கூறிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்று மேயர்பதவியைப் பொறுப்பேற்றார். கணவர் கொல்லப்பட்டாலும் மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற சமூக உணர்வுக்கு முன்னால் புலிகளின் துப்பாக்கி அன்று வெற்றி பெற்றுவிட்டது.
மேமாதம் 13 2008ம்ஆண்டு மனித உரிமைச்சட்டத்தரணியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் அவரது இல்லத்தில் வைத்து புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கடும்சுகவீனம் அடைந்த தாயாரை தாய்ப்பாசத்தால் கடைசிக்காலத்தில் சிலநாட்கள் அவருடன் தங்கியிருந்து பராமரித்துக்கொண்டும் அதேநேரத்தில் யுத்த சூழ்நிலையால் பராமரிப்பு இல்லாமல் இருந்த அவர்களின் கோவிலான வைரவர்கோயிலை புனரமைத்து கும்பாபிசேகம் செய்வதற்கும் ஆயத்தமான வேளையில் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழ்மக்களின் விடுதலைக்காக பல அமைப்புகளில் இணைந்து பணியாற்றியது மட்டுமல்ல சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக இலவசமாக வாதாடி விடுதலைபெற்றுக்கொடுத்தவர். இந்துசமய வளர்ச்சிக்கும் இந்துக்கோவில்களை புனர்அமைக்கும் பணியையும் அமைச்சின் உதவியுடன் ஆற்றி வந்தார். தனது குலதெய்வமான சிவனை வழிபடும் மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் சிவன் என்னைக்கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையையுடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றார். ஆனால் புலிகள் எமனாகமாறி பெண் என்றும் பாராமல் படுகொலை செய்துவிட்டார்கள்.
27-07-1975ம் ஆண்டு மேயர் அல்பிரட் துரையப்பா அவர்களில் ஆரம்பித்த முதல் படுகொலையானது இறுதியில் மேமாதம் 13 2008ம் ஆண்டு செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் மரணத்துடன் முடிவுக்கு வந்தது. சொல்லப்போனால் ஆலயத்தில் வழிபடச்சென்ற மேயர் அல்பிரட் துரையப்பாவில் தொடங்கிய கொலை ஆலயத்தில் கும்பாபிசேகம் செய்யச்சென்ற மகேஸ்வரி வேலாயுதத்துடன் முற்றுப் பெற்றிருக்கின்றது. பிரபாகரன் தனக்குத்தானே தனது புதைகுழியைத்தோண்டி மேமாதம் 18ந்திகதி 2009ம்ஆண்டு தான் தோண்டிய புதைகுழியிலேயே அவஸ்தைப்பட்டு அனாதையாக மரணமானார்.
மேயர் அல்பிரட் துரையப்பா அவர்கள் பொன்னாலை வரதராஜபெருமாள் கோயிலில் வழிபட்டுக்கொண்டிருக்கும்போது புலிகள் இயக்கத்தலைவரான பிரபாகரனால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். துரையப்பா அவர்கள் ஏழைகளின் தொண்டனாகவும் மக்கள் பலத்தை கொண்ட அரசியல்வாதியாகவும் பல ஏழைகளின் வீடுகளில் அடுப்பு எரியவைத்தது மட்டுமல்ல சாறம் உடுத்தவர்களை லோங்ஸ் அணிய வைத்து பார்த்த ஒரு மாபெரும் தலைவர். இவரை ஒரு குட்டி எம்.ஐp;.ஆர் என்று குறிப்பிடும் அளவிற்கு அவரின்சேவை அளப்பரியது. இன்றும் யாழ்நகரில் நிமிர்ந்து நிற்கும் அவரினால் கட்டப்பட்ட கட்டிடங்கள்; சாட்சியாக உள்ளன.
இதைவிட ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் ஏனைய விடுதலை இயக்கப்போராளிகள் தமிழ்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்திய இராணுவம் இலங்கையை விட்டுச்சென்ற பின்னர் மட்டும் புலிகளினால் கிட்டத்தட்ட3000 பேர்கள்வரை கைது செய்யப்பட்டு வன்னிக்காட்டுக்குள் உள்ள துணுக்காயில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டு எவ்வித ஆதாரங்களும் எவர் கையிலும் கிடைக்கமுடியாதபடி எரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈ.பி.ஆர்;எல்.எப் ஈ.என்.டி.எல்.எப் தமிழர்விடுதலைக்கூட்டணியை ஆதரித்தவர்களும் தமிழர்களுக்கு என உருவாக்கப்பட்ட வடக்குகிழக்குமாகாண நிர்வாகத்தில் பங்கெடுத்தவர்களும்; அடங்குவார்கள். கொழும்புக்கு தப்பி ஒடிய தமிழர்கள் பலரும் புலிகளினால் சிறிலங்கா அரசின் உதவியுடன் அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டு வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் தற்போது வன்னியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கும் அல்லது சரண் அடைந்திருக்கும் முக்கிய புலி உறுப்பினர்களும் மேற்குறிப்பிட்ட கொலைகளுடன் தொடர்பு உடையவர்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். துணுக்காய் சிறையில் அடைக்கப்பட்டு அனைத்து சம்பவங்களையம் நேரில் கண்ட சமரன் என்பவர் எழுதியநூலில் இருந்து விபரமாக எழுதப்பட்டிருக்கின்றது. அத்துடன் மனித உரிமை அமைப்புகள் இந்த ஆயிரக்கணக்கான கைது காணமல்போனதைபற்றி இன்றுவரை அக்கறை எடுக்காமல் இருக்கின்றனர். நிட்சயமாக மனித உரிமை அமைப்புகள் இவர்கள்பற்றி விசாரணை நடத்தினால் இவர்களின் உறவினர்கள் சாட்சிசொல்ல தயாராக இருக்கின்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக