புதன், 15 செப்டம்பர், 2010

ஆதரவு அளித்த எம்.பிக்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டது – ரணில

அரசுக்கு ஆதரவு அளித்த எம்.பிக்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டது – ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த லக்ஸ்மன் செனவிரட்ன மற்றும் ஏல் குணசேகர ஆகியோரின் உறுப்புரிமை ரத்துச் செய்யப் பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
18ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கு ஆதர வளித்த ஆறு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பி னர்களில் குறித்த இருவரும் அடங்குகின்ற னர். திருத்தச்சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த ஏனைய ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் குறித்து ஒழுக்காற்று குழு தீர்மானிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதா கவும் ஒரே நாளில் மறுசீரமைப்பு பணிகளை நிறைவேற்ற முடியாது.மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு சிறிது காலம் எடுக்கும் எனவும், மறுசீரமைப்பு பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
இளம் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட் டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்படுவதற்கு நாடாளுமன்ற உறுப் பினர்கள் பின்னடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. ரணிலுடன், தேசிய பட்டியல் மூலம் நியமிக்கப்பட்ட சிலரே இணங்கிச் செயற்படுவதாகவும் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை: