சனி, 18 செப்டம்பர், 2010

பாகிஸ்தான் அரசியல்வாதி லண்டனில் படுகொலை

பாகிஸ்தானில் ஒரு காலத்தில் இயக்கத்தில் இருந்த முத்தாகிதா குவாமி அரசியல் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த இம்ரான் ஃபரூக் என்பவர் லண்டனில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே மர்மமான முறையில் கொலையுண்டு கிடந்ததாக லண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

1992ஆம் ஆண்டு முதல் இவர் லண்டனில் வசித்து வருவதாகவும் அதன் பிறகு அவர் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை என்றும் தெரிகிறது.

முத்தாகிதா குவாமி இயக்கம் கராச்சியில் பெரிய அரசியல் கட்சியாகவே ஒரு காலத்தில் இருந்தது. மேலும் இந்தக் கட்சி தாலிபன்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

1947ஆம் ஆண்டு நடந்த பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து உருது பேசும் இஸ்லாமிய மக்கள் கராச்சியில் குடிபெயர்ந்தனர். இந்தக் கட்சியில் இவர்கள் அதிகம் இருந்தனர்.

தாலிபானுக்கு எதிரான முத்தாகிதி குவாமி கட்சியின் நிலைப்பாடு பொதுவாக பாஷ்டூன் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டின் ஒரு விரிவே என்று அப்பொது இந்தக் கட்சி மீது ஒரு குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

லண்டனுக்குத் தலைமறைவான கொலையுண்ட இம்ரான் ஃபரூக், 1992ஆம் ஆண்டு தன்னை தவறாக பயங்கரவாதி என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியது என்றும் இதனால் தான் லண்டனுக்குச் செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: