புதன், 16 ஜூன், 2010

நக்ஸலைட்கள, ரமணா பட பாணியில் ஆந்திராவில் ஊழல் அமைச்சர்கள்் ஒவ்வொருவராக வேட்டையாட நக்ஸலைட்கள

ஹைதராபாத்: ரமணா பட பாணியில் ஆந்திராவில் ஊழல் அமைச்சர்கள் பட்டியல் தயாரித்து, ஒவ்வொருவராக வேட்டையாட நக்ஸலைட்கள் திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 'களையெடுப்பை' அவர்கள் போலீஸ் வேடத்தில் போய் செய்யத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளதால் அமைச்சர்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.

சமீபத்தில் ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் சுற்றி வந்த நக்சலைட் சந்திரசேகர் பிடிபட்டார். அவரிடமிருந்து ஏ.கே.47 துப்பாக்கி, செல்போன்கள், அமைச்சர்களின் பாதுகாவலர்கள் அணியும் சபாரி உடைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவருடன் போலீஸ் வேடத்தில் இருந்த 2 முக்கிய நக்சலைட்டுகள் தப்பிவிட்டனர்.

பிடிபட்ட நக்சலைட் சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஊழல் அமைச்சர்கள்- அதிகாரிகளைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு தனிப் பிரிவைறை ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் ஹைதராபாத்தில் பதுங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து போலீசாருக்கு உளவுப் பிரிவினர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நக்சலைட்டுகள் போலீஸ், அமைச்சர்களின் பாதுகாவலர்கள் வேடத்தில் வருவதால் ஆந்திர போலீசார் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். ஊழல் புகார் கூறப்பட்ட அமைச்சர்களுக்கு பாதுகாப்பு தரும் போலீசார் எந்நேரமும் விழிப்புடன் செயல்பட வேண்டும். அடையாள அட்டை வைத்திருப்பது அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: