செவ்வாய், 15 ஜூன், 2010

தேனப்பன் ,கமல் இல்லையென்றால் நான் இல்லை... அவர்தான் எனக்கு கடவுள் மாதிரி

ய்யனார் படத்தின் இசை வெளியீட்டு விழா... இடம் 'வழக்கமான' சத்யம் திரையரங்கம்.

பி.எல். தேனப்பன் சின்ன இடைவெளிக்குப் பிறகு தயாரித்துள்ள படம் இது. திரையுலகப் புள்ளிகள் திரளாக வந்திருந்தனர்.

பாரதிராஜா முதல் இசைத் தகட்டை வெளியிட, அதை சன் பிக்சர்ஸ் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, தயாரிப்பாளர் தேனப்பன், கலைப்புலி தாணு, எஸ்ஏ சந்திரசேகரன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் பேசிய இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன், "பக்கத்தில இடி விழுந்தா கூட பதட்டப்படாம அந்த இடத்தை பார்த்திட்டு சிரிச்சுகிட்டே போக்கூடிய அளவு மகா நிதானமானவர் தேனப்பன். எதுக்கும் கவலைப்படாத மனிதர் தேனப்பன்" என்றார்.

அடுத்துப் பேசிய இயக்குநர் அமீர், "ஆம்.. இடி விழுந்தாலும் கவலலைப்படாதவர்தான் தேனப்பன்... காரணம் அந்த இடியை போட்டதே அவராகத்தான் இருக்கும்" என்றார்.

இயக்குநர் பாரதிராஜாவோ, தேனப்பனை மிகச் சிறந்த ராஜதந்திரி என்று தன் பங்குக்குப் புகழந்து தள்ளினார்.

பின்னர் பேசிய தேனப்பன், "கமல் இல்லையென்றால் நான் இல்லை... அவர்தான் எனக்கு கடவுள் மாதிரி" என்றார். பக்கத்திலிருந்த தாணுவின் முகத்தில் அப்போது ஒரு புன்னகை ஓடி மறைந்ததைப் பார்க்க முடிந்தது!

படத்தின் மக்கள் தொடர்பாளர் நிகிலையும் பாராட்டத் தவறவில்லை பாரதிராஜா. "எங்க பார்த்தாலும் இந்தாளுதான்யா முதல்ல நிக்கிறார்... எப்பவும் சுறுசுறுப்பா ஓடிக்கிட்டே இருக்கார். அதான் சினிமாவில் ஜெயிக்க முக்கியம்" என்றார்.

பொதுவாக இம்மாதிரி நிகழ்ச்சிகளில் பாடல் காட்சிகள் மட்டும்தான் திரையிடப்படும். முதல் முறையாக இந்தப் படத்தின் சண்டைக் காட்சியை திரையிட்டுக் காட்டினர்.

பதிவு செய்தவர்: JAISANKAR
பதிவு செய்தது: 14 Jun 2010 6:36 pm
இந்த தாணு பாவம் கமலை குறை சொல்லிட்டு விகரம்மை போட்டு கந்தசாமி படம் எடுதிடுடு போண்டி ஆயிட்டான்.

கருத்துகள் இல்லை: